நடுத்தெரு வாய்க்கால் தெருவின் பிராதான பகுதியில் சலவை நிலையம் நடத்தி வருபவர் ராமநாதன். இவர் இந்த பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். இந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கூரையால் ஆன இவரது கடையை கடந்த அன்று [ 07-05-2015 ] நள்ளிரவில் சுமார் 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் தீ வைத்து கொளுத்தியதில் சலவை நிலையம் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் புதிதாக கூரை அமைத்துக்கொடுத்துள்ளார். இன்று காலை முதல் மீண்டும் ராமநாதன் தனது சலவை தொழிலை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளார்.
வாய்க்கால் தெரு பிரதான நான்குவழி சாலை முக்கத்தில் தினமும் இப்பகுதியினரால் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு வந்தது. குப்பைகளை இப்பகுதியில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் கிளறுவதால் ஆங்காங்கே சிதறிக்காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் புதிதாக சலவை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், இனி சிதறிக்கிடக்கும் குப்பை கூளங்கள் வெகுவாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் உத்தரவின் பேரில் துப்புரவு பணியாளர்களால் இன்று காலை இந்த பகுதி தூய்மை செய்யப்பட்டு பளிச்சென காணப்படுகிறது.





No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.