இன்றைய ஆட்டமாக அதிரை AFFA அணியினரும், ஆலத்தூர் அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 5-0 என்ற கணக்கில் கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர். இதில் AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் கொய்யாப்பழம் ஆஷிப், சபானுதீன் ஆகியோர் தலா இரண்டு கோல்களும், சீனியர் வீரர் புர்கானுதீன் ஒரு கோல் போட்டு தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக காரைக்கால் அணியினரும், சென்ற ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற தஞ்சை அருள் அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.15 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

please add insha allah...நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.15 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
ReplyDelete