.

Pages

Friday, May 8, 2015

அதிரை சேர்மனின் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு எதிரொலி: மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் நேரில் சமரச முயற்சி !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் இன்று [ 08-05-2015 ] காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அதிரை காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமதி மீனாட்சி அவர்கள் நேற்று காலை அதிரைக்கு வருகை தந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிப்பது தொடர்பாக கூடுதல் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார்.

பேச்சுவார்த்தையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, மருத்துவர்கள் அப்துல் ஹக்கீம், ஹாஜா முகைதீன், அரசு மருத்துவமனை மருத்துவர், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறும் போது,
'இரவு நேர மருத்துவர் நியமிக்காததை அடுத்து இன்று காலை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக இருந்தது. இதையடுத்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு வார காலம் அவகாசம் கூடுதலாக கேட்டுள்ளனர்.

அதிரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் நியமிப்பதில் மீண்டும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் எனது தலைமையில் எதிர்வரும் [ 16-05-2015 ] அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.