.

Pages

Tuesday, May 5, 2015

சிறுவர்களை கவரும் செக்கடி குளம் பூங்கா !

செக்கடி குளத்தை சுற்றி நடை பயிற்சி பாதை அமைத்து, நவீனப்படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

செக்கடி மேடு நடை பயிற்சி பாதையில் சிறுவர்கள் ஒன்றாக விளையாடும் நோக்கில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சறுக்கை, ஊஞ்சல் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது அதிரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் நமதூர் சிறுவர்கள் கோடை விடுமுறையை உள்ளூரில் குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிடைக்கும் காலை, மாலை நேரங்களில் ஒன்றாக கூடும் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பூங்காவில் பொழுதை கழித்து வருகின்றனர். நேரம் போவது தெரியாமல் விளையாடி வருகின்றனர். இவர்களின் குதுகலத்தை காணும் பெற்றோர்கள் ஆனந்தமடைகின்றனர்.

குறிப்பு: எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகள், செக்கடி குளம் பூங்காவில் விளையாடும் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.
 
 
 

3 comments:

  1. சுற்று வட்டாரத்தில் பூங்கா என்றால் அது பட்டுக் கோட்டை - காந்தி பூங்கா தான் நினைவுக்கு வரும் அது இப்போ செயலிழந்து -பொலிவிழந்து காணப் படுகிறது அதோடு மட்டுமல்லாமல் சமூக விரோதிகள் காந்தி பூங்கா அருகே டாஸ்மாக் மதுபான கடையில் சரக்குகளை வாங்கி கொண்டு காந்தி பூங்காவிற்குள் மதியம், மாலை, இரவு நேரங்களில் மறைமுகமாக வைத்து மதுபானங்களை குடிக்க ஐக்கியமாகி விடுகின்றனர். இதனால் அங்கு டாஸ்மாக் மதுபாட்டில், வாட்டர் பாக்கெட் இதர பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள் குப்பைமேடாக உள்ளன. மூக்கை பிடித்துக்கொள்ளும் அளவுக்கு சிற்நீர் துர்நாற்றம். இப்படி பார்த்த கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் ஒரு இடம் நம்மவூரில் செக்கடி குளம் பூங்கா திகழ்கிறது, அழகான வடிவமைப்பு, பெரியவர் - சிறியவர் தேவையான பயிற்சி கொண்ட இடமாக உள்ளது, செக்கடி குளம் பூங்கா என்பதை அழகான பெயரை சூட்டினால் மேலும் அதிரைக்கே பெருமை சேர்க்கும் என்பது தனிப்பட்ட கருத்து, இரவு பகல் பாராமல் தன்னை அற்பனித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,ஆண்களின் ஆரோக்கியத்திற்க்கு அனைத்துவிதமான வசதிகளையும் ஏற்படுத்திதரும் நாம்,வீடுகளில் நம்மை கவனித்துக் கொள்ளும் பெண்களின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்...இந்த பூங்காவில் பெண்கள் வாக்கிங் செல்ல தினமும் ஒரு நேரத்தை ஒதுக்கி ஆண்கள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..பெண் ஆரோக்கியமே குடும்பத்தின் ஆரோக்கியம்….இதை நடைமுறை பயன்படுத்தி இருக்காங்களா என்று எனக்கு தெரியாது
    ஒரு அறிவுரைதான் எந்த அளவிற்க்கு இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை பொருப்பாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்....அற்புதம் இதனை வடிவமைத்தவர்களுக்கு அல்லாஹ் நற்க்கூலியை வழங்குவானாக..

    பெண்களுக்காக தனி நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் அந்நேரத்தில் ஆண்களுக்கு அனுமதி யில்லை எனவும் கேள்வியுற்றேன்...அல்ஹம்துலில்லாஹ்

    சிறுவர்கள் கவனமாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் விளையாட வேண்டும் அதற்காக வாக்கிங் வரும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.