.

Pages

Friday, May 8, 2015

அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை இளைஞர்கள் - டெர்ரி வியர் நிறுவனம் இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை அதிரை லாவண்யா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி வாழ்த்துரை வழங்கினார். காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருச்சி காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியை எம். ஆசியதாரா கல்வி குறித்து சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நமதூர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி மாணவ மாணவிகளிடேயே கேள்வி - பதில் நிகழ்ச்சி நடத்தினார்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்புரையாற்றி தொடர்ந்து அறிமுக உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் முன்னிலையில் +2 தேர்வில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் காலித் அஹ்மது தொகுத்து வழங்கினார். விழா முடிவில் டெர்ரி வியர் நிறுவன உரிமையாளர் இப்ராஹீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.