.

Pages

Saturday, May 9, 2015

புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை !

முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழு கூட்டம் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கௌரவ தலைவர் திருஞானம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். பொருளாளர் நெய்னா முகம்மது வரவு, செலவு கணக்கு வாசித்தார். கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. இதில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த சிமிண்ட் தளம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடன் பேரூராட்சி நிர்வாகம் பணியை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் இர்பான் ஹைதர்அலி, பூம்புகார் செல்வம், ஹீரா பாருக், சினேகா பழனிதுரை, பேட்டை ராஜேஸ் கன்னா, மீனா கணேசன், முகம்மது அலி, தாவூது அடுமை, ஹகீம் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் முகைதீன் பிச்சை நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.