இவர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 29 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 150 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இரத்ததானம் கொடையாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நற்பணி மன்றங்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் 'மணிச்சுடர்' நிருபர் ஏ. சாகுல் ஹமீது அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இவருடைய குருதிக்கொடையை பாராட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.


அதிரைக்கும் சொல்லப்போனால் அதிரை நியூசுக்கும் இவர் தனது உழைப்பை இரத்தமாகக் கொடுக்கிறார். பாராட்டுக்கள்.
ReplyDeleteCongratulations, may Allah accept your good deeds and extend your healthy life and helping heart. Keep it up maplay...
ReplyDeleteBy vavanna Ibrahim
Congratulations, may Allah accept your good deeds and extend your healthy life and helping heart. Keep it up maplay...
ReplyDeleteBy vavanna Ibrahim
Nanre
ReplyDeletenanbarkalea