இதுகுறித்து அப்பகுதியின் பெண்கள் கூறியதாவது...
'தொடர் மழையால் எங்கள் பகுதி மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் பால் வண்டி முதல் அன்றாடம் பயன்படும் அத்திவாசிய பொருட்கள் எங்கள் பகுதிக்கு கொண்டு வருவதில் வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக எங்கள் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், காலதாமதமானால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்' என எச்சரித்தனர்.
இதுதொடர்பாக பேரூராட்சி அலுவலக தொடர்புடையவர்களிடம் விசாரித்த போது...
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு பெரிய தைக்கால் தெரு பகுதியிலிருந்து ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க திரு என் ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 1,60,000/- மதிப்பீடு செய்து பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ 115,000/- நிதி தேவைப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ சார்பில் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்புதல் பெற்றவுடன் விரைவில் பணி தொடங்கி விடும்' என தெரிவித்தனர்.






அடிப்படை வசதி செய்து தரக்கோரி பெண்களே போராட வந்துவிட்டார்கள் ஆனால் அப்பகுதி வார்ட் மெம்பெர் என்ன செய்தாருன்னு தெரியவில்லை. அடிக்கடி முறையிட்டும் அதிகாரிகள் ஆவன செய்கிறேன்னு சொல்லி காலத்தை போக்கிவிடுவார்கள் மக்களும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வைத்த கோரிக்கைகள் மறந்தும் விடுகிறார்கள் மறதி என்பது அது ஒரு தேசிய வியாதி. தேர்தல் காலம் நெருங்குவதால் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு ஆனால் அடுத்த மழையில் ரோடு காணாமல் போய்விடும். அதனால பிளாஸ்டிக் ரோடு போடுங்கள்.
ReplyDelete