.

Pages

Showing posts with label சென்னை செய்திகள். Show all posts
Showing posts with label சென்னை செய்திகள். Show all posts

Sunday, July 15, 2018

சென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா!

அதிரை நியூஸ்: ஜுலை 15
சென்னை : சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் வளாகத்தில் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் அமானத் அறக்கட்டளை வெளியிடும் O.M. அப்துல் காதிர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாம் மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காஸிமி தலைமை வகிக்கிறார். திருச்சி காதர் மஸ்ஜித் இமாம் மௌலவி எஸ். முஹம்மது மீரான் மிஸ்பாஹி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

வலங்கைமான் ஜமாலி ஹிஃப்ளூ கல்லூரி மௌலவி இசட். தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்துகிறார். சென்னை சாந்தோம் மஸ்ஜித் தக்வா இமாம் மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மௌலவி வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமுமு. முகமதலி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி, இந்திய தேசிய லீக் தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்ஹாஜ்  கே.எஸ்.ஓ.எம். பஷீர் அகமது, எல்.கே.எஸ் கோல்டு ஹவுசின் அல்ஹாஜ் எஸ். செய்யது அஹமது உள்ளிட்ட பலர் பிரதிகளைப் பெறும் அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் சபையின் கௌரவத் தலைவர் அல்லாமா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி, சென்னை மதரஸா காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது இப்ராஹிம் பாகவி, சென்னை மஸ்ஜிதே மஃமூர் இமாம் மௌலவி கே.ஏ. அப்துல் ரஹ்மான் பாழில் ரஹ்மானி உள்ளிட்ட ஆன்மிக ஆசான்கள் பிரதிகளை வெளியிடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாம் அமர்வில் மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி, மௌலவி எம். சதீதுத்தீன் பாகவி, மௌலவி எம். அபூதாஹிர் பாகவி உள்ளிட்டோர் உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
 
 

Monday, March 19, 2018

சென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்” காப்பியம் வெளியீட்டு விழா!

சென்னை : வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகத்தாரின் வெளியீடாக, டாக்டர் ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களால் ஆக்கப்பட்ட, “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்” காப்பியம், சென்னை எக்மோர் வெஸ்டின் பார்க் ஓட்டல் அரங்கில் 17/03/2018 சனிக்கிழமை மாலை இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.

விழாவுக்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் முனைவர் சே.மு.மு. முஹம்மதலி தலைமை தாங்க, துபை தொழில் அதிபர் எம்.ஜே.எம். இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் முஹைதீன் காப்பியத்தை வெளியிட, மூதறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், டாக்டர் உமர் ஹாஷிம், சென்னை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காப்பிய சிறப்பு, அன்னை கதீஜா அவர்களின் மாண்புகள், நபிகள் நாயகத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைப் பற்றி குறிப்பிட்டு, மக்கள் அனைவரும் மனிதநேயம் பேணி வாழ வேண்டும் என கூறினார்.

கே.எம். காதர் முஹைதீன் அவர்கள் புரவலர் எம்.ஜே.எம். இக்பால் அவர்களுக்கு, இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் “சமுதாய​பேரொளி” விருதும், ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களுக்கு “பெருங்காப்பியக்கோ” விருதும் வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன், சன் டிவி வீரபாண்டின், பேராசிரியர் திருநாவுக்கரசு, ஜமாதுல் உலமா தலைமை நிலைய நிர்வாகி பேராசிரியர் தேங்கை ஷர்புதீன், வி.ஜெ.டி. டிரஸ்ட் நிர்வாகி எம்.ஜே. அப்துல் ரவூப், கவிஞர் ஜா. முஹையதீன் பாட்சா, பேராசிரியர் டாக்டர் சதீதுத்தீன் பாகவி, டாக்டர் அஹமது மரைக்காயர், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், பேரா. மு. சாயபு மரைக்காயர், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மேலும், இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

Wednesday, May 31, 2017

சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ( படங்கள் )

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.

கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.

சாலைப் போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்

நன்றி: தி இந்து தமிழ்
 
 
 
 
 
 
 

Friday, January 6, 2017

சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்!

2015-ம் ஆண்டு மழை, கடந்த டிசம்பர் வர்தா புயல் என இயற்கை என்னதான் சென்னையைப் புரட்டிப் போட்டாலும்,  சென்னை வாசிகள் கம்பேக் ஆகி நார்மலுக்குத் திரும்பி விடுவது ஜனவரி மாத புத்தகக் கண்காட்சியில்தான். ஆண்டுதோறும் சோகம் மறந்து ஞானம் தேடும் கூட்டம் மொய்க்கும் இடமாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறி வருகிறது.இந்த வருடம் மீண்டும் பிரமாண்டத்தைக் காட்ட தயாராகிவிட்டது புத்தகக் காட்சி.

40-வது சென்னை புத்தகக் காட்சி இன்று (06.01.17) தொடங்கியிருக்கிறது. வரும் 19-ம் தேதி வரை செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாசிப்பைப் பரவலாக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த வருடம் மழை காரணமாக ஜூன் மாதம் நடைபெற்றது. 6 மாதம் தாமதமாக நடைபெற்றதால் வழக்கமான அளவைக் காட்டிலும் குறைந்த அளவே விற்பனை இருந்தது. இந்த முறை அதிக அளவு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்காட்சியில் 700 அரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 80 சதவிகிதம் அளவுக்கு தமிழ் மொழி புத்தகங்களும் , 20 சதவிகித புத்தகங்கள் பிற மொழிகளிலும் அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்,  விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக்கண்காட்சி திறந்திருக்கும்.

நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் வர விரும்புவோர்களுக்கு ரூ.50 சீசன் நுழைவு கட்டணச் சீட்டுகளும், 4 பேர் கொண்ட குடும்பத்தினர் தினமும் வந்து செல்ல ரூ.100 சீசன் நுழைவு சீட்டுகளும் கொடுக்கபடுகின்றன.

புத்தக்கண்காட்சியில் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்காக 50 ஸ்வைப் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட தொகைக்கு கார்டை பயன்படுத்தி ஸ்வைப் செய்தால்  அந்த மதிப்புக்கு நிகராக ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்புள்ள டோக்கன்கள் பெற்றுக் கொள்ளலாம். அதை ஸ்டால்களில் கொடுத்து புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.  இது தவிர புத்தகக் கண்காட்சியில் 2 நடமாடும் ஏ.டி.எம் மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

40-வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, இந்த முறை புதியதாக ஸ்மார்ட் போன் செயலி ஒன்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, எந்த எண்ணில் எந்த அரங்கு இருக்கிறது என்ற தகவலைப் பெற முடியும்.

இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடப்பற்றாக்குறை ஏற்படாத வகையில், செயின்ட் ஜார்ஜ்  பள்ளிக்கு எதிரில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியில் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தமுறை புத்தகப் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் திருவிழாவாக புத்தகக் கண்காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நந்தினி சுப்பிரமணி
நன்றி: விகடன்

Friday, November 18, 2016

சென்னை பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீ விபத்து !

சென்னை பாரிமுனையில் தனியார் வங்கிகள் இயங்கி வந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ பிடித்தது. கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களில் 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை பாரிமுனை ஜஹாங்கீர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ பிடித்தது. 4 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில், யெஸ் பேங்க், பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ், கத்தோலிக்க சிரியன் வங்கி, கோட்டக் மகேந்திரா, ஆர்பிஎல் ஆகிய 5 வங்கிகள் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வங்கியின் மேல் தளத்தில் சிக்கியிருப்பவர்களை கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடம் முழுக்க கரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

மக்கள் கூட்டமாக கூடி தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்
 
 

Wednesday, November 2, 2016

3 விநாடிகளில் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் ( படங்கள் )

சென்னை, போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டடம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று இரவு 6.50 மணிக்கு 3 விநாடிகளில் இடிக்கப்பட்டது. ’இம்லோஷன்' எனப்படும் உள்வாங்கி இடிந்து விழுதல் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் கட்டடம் தகர்க்கப்பட்டது.
 

Wednesday, September 21, 2016

உளவுத்துறை - சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரனுடன் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது மரியாதை நிமித்த சந்திப்பு ! ( படங்கள் )

சென்னை, செப்-21
தமிழக உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்களை எம்.எம்.எஸ் பஷீர் அஹமது மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், கடந்த செப். 6 முதல் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் சட்டம் - ஒழுங்கு டிஜிபி பணி முழு கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, டி.ஐ.ஜி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின் போது இவரது புதல்வர்கள் எம்.எம்.எஸ் புஹாரி, எம்.எம்.எஸ் சம்சுதீன் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது நம்மிடம் கூறியது:
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசு அலுவலர்களோடும் - அரசியல் பிரமுகர்களோடும் நல்ல நட்புறவு பேணும் பழக்கத்தை மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன் மரைக்காயர், எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர், எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் ஆகியோர் எங்களுக்கு கற்றுத்தந்தது. இந்த பழக்கத்தை இன்றளவும் எங்களது குடும்பத்தினர் பேணி வருகின்றோம்.

சமீபத்தில் உளவுத்துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அப்போதிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சையமானவர். இன்று நேரில் சந்தித்து நாங்கள் வாழ்த்து கூறினோம். இந்த சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது' என்றார்.

Saturday, December 12, 2015

வெள்ள மீட்பு பணியில் பலரது உயிரைக் காப்பாற்றிய பள்ளி மாணவர் விஷப்பூச்சி கடித்து உயிரிழப்பு !

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்த மாணவ இம்ரான் விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த மாணவர் இம்ரான் வயது 17 ஆகும். திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனாவார். புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த இம்ரான், விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.

சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதி கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதயத்தை சேர்ந்த பலர் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீட்பு பணியில் இருந்த இம்ரானை வெள்ளநீரில் வந்த விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் இம்ரான் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களை தன்னுயிரையும் பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மாணவன் இம்ரான் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:தினகரன்

Thursday, December 3, 2015

கண் பார்வை இழந்தவர்களுக்கு கரம் கொடுத்து உதவிய எஸ்டிபிஐ - இந்திய தவ்ஹீத் ஜமாத் !

கோடம்பாக்கம் லிபர்டி ஆதி திராவிடர் அரசினர் விடுதியில் தங்கிருந்த கண்பார்வையற்றவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்பார்வையற்ற 11 பேரை எஸ்டிபிஐ ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவல்லிக்கேணி பள்ளிவாசலில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு வேண்டிய உதவியை எஸ்டிபிஐ கட்சி மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செய்துகொடுத்தனர்.

சாதி, மதம், இனம் பாகுபாடின்றி வெள்ளம் பாதித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சேவை தொடர்ந்து நடந்து வருகிறது.
 

சென்னை வெள்ள மீட்புப் பணிகளில் தமுமுக !

கடந்த 100 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள சென்னை மாநகரம் தற்போது தீவு போலக் காட்சி அளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பெரு மழை காரணமாக, சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கான சாலை, ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் முப்படைகள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் மாநில போலீஸார், தீயணைப்புப் படையினருடன் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் வீரர்களும் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களோடு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு வேண்டிய உணவுகளை தேடிச்சென்று வழங்கி வ ருகின்றனர். சாதி மதம் இனம் பாகுபாடின்றி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்தமுமுகவின் சேவை தொடர்ந்து நடந்து வருகிறது.