.

Pages

Monday, February 4, 2013

அதிரையில் புதியதோர் உதயம் ஹபீபா ஷாப்பிங் மால் !

இன்று [ 04-02-2013 ]  காலை 9 மணியளவில் நமதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எவர் கோல்ட் வணிக வளாகத்தில் புதிய ஹபீபா ஹைபர் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டது.

இங்கு அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Sunday, February 3, 2013

மின்னொளி கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பும்... [ காணொளி ]

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பு நிகழ்ச்சியும்...


Video Covered By :
 Mr. Iqram [ adiraiclassifieds.com ]

அதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் ஹபீபா ஹைபர் மால் !

நாளை [ 04-02-2013 ]  காலை 9 மணியளவில் நமதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எவர் கோல்ட் வணிக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட உள்ளது ஹபீபா ஹைபர் ஷாப்பிங் மால். 

இங்கே அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

கோப்பையை அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர் தட்டிச்சென்றனர் !

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறப்பாக துவங்கியது.
நேற்றைய முதல் ஆட்டத்தை அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன், கீழத்தெரு மஹல்லா அமீர கிளையின் துணைத்தலைவர் சிஹாப்தீன் மற்றும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சேக் அலாவுதீன்,அஜ்மல்கான், அமீர் பாட்சா, அமானுல்லா [ சேட்டு ] ஆகியோர் துவக்கி வைத்தனர்.


மின்னொளியில் இரவு ஆட்டமாக நடந்து போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெற்று விளையாடினர். அதில் நான்காவது இடத்தை அதிரை Terry Wear  அணியினரும், மூன்றாவது இடத்தை நிரவி அணியினரும் தக்க வைத்திருந்தனர்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கடலூர் அணியினரும், அதிரை ப்ரண்ட்ஸ் அணியினரும் விளையாடினர். இந்த ஆட்டத்தில் அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர் முதல் இடத்தைப் பெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.

பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச்சென்ற அதிரை ப்ரண்ட்ஸ் அணியினரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வெற்றிகோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி கெளரவித்தார்.

இரண்டாம் பரிசை வெற்றிபெற்ற கடலூர் அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட 'மனித உரிமைக்காவலர்' KMA. ஜமால் முஹம்மது அவர்கள் வழங்கி கெளரவித்தார்.

மூன்றாம் பரிசை வெற்றி பெற்ற நிரவி அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட A. முஹம்மது உமர் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.

நான்காம் பரிசை வெற்றி பெற்ற அதிரை Terry Wear  அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட MMS. அப்துல் ரஹுப் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.

பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் சிறப்புரையுடன் துவங்கிய இன்றைய நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர். நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளும் அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to : 
Organizer of ESC Team &
www.adiraiclassifieds.com

Saturday, February 2, 2013

'நமக்கேன் வம்புன்னு' !? ஒதுங்கக் காரணமென்ன !?

மதுக்கடைகள் - இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

இப்படி குடும்பத்திற்கு சங்கு ஊதிடும் குடும்பக்கொல்லியாகிய மதுக்கடையொன்று கடந்து சில வாரங்களுக்கு முன்பு அதிரை - பட்டுக்கோட்டைச் சாலையில் உள்ள "அதிராம்பட்டினம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்ற அறிவிப்பு எல்லை இடத்தில் அமைதியாக திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகின்றது.

இப்பகுதி அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய நெடுஞ்சாலைப்பகுதி மட்டுமல்ல அதன் அருகில் வழிபாட்டுத்தளம், துணை மின் நிலையம், விரைவில் திறக்கப்பட உள்ள தொழிற்கூடம், மருத்துவமனை, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்டென் காஸ் அலுவலகம், திருமண மண்டபம் ஆகியன எட்டிப்பார்க்கும் தூரத்தில் உள்ளது. அதோடு பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில கடந்து செல்லுகின்ற பாதை என்பதும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாலை, மாலை நேரங்களில் "வாக்கிங்" "சைக்கிளிங்","ஜாக்கிங்" போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு.

இப்பகுதியில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய சமூகக்கொல்லி, குடும்பக்கொல்லி, உயிர்க்கொல்லியாகிய "மதுக்கடை"

ஆண்டுதோறும் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பாக 2008-2009-ம் ஆண்டில் சாலை விபத்தில் 11 ஆயிரத்து 813 பேரும், 2009-2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 727 பேரும், 2010-2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 241 பேரும் கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 359 பேரும் 2011-2012-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 422 பேரும்  சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். இதில் பெரும்பாலான விபத்துகள் போதையிலேயே நிகழ்ந்துள்ளது என்கிறது ஆய்வுகள்.

சமூக நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மதுவை ஒழிப்பது நம் ஒவ்வொருவரின் அவசியக் கடமையாகும். இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தடுக்கும் நோக்குடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளூர் சமூக அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் தலையாயக் கடமையாக கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது பெருவழிச்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக ஒன்று திரண்ட ஏரிபுறக்கரை கிராம பொதுமக்கள் மதுகடைக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர்.
பல்வேறு பிரிவினர் வசிக்கக்கூடிய இந்த சிறிய கிராமத்தில் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி மாபெரும் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட அவர்களால் மிகப்பெறும் மக்கள்தொகை கொண்ட நமது ஊரில் ஏன் அதே போல் செயல்பட முடியாது !?

எண்ணற்ற இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் ஏதாவது ஒன்றில் அங்கம் வகிக்கும் !? நம்மால் ஏன் முடியாது ?

அல்லது இப்படி ஒரு பிரச்சனை இருப்பது உள்ளூர் இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றிற்கு தெரியாமல் போய்விட்டதா !? அல்லது தெரிந்தும் 'நமக்கேன் வம்பு' !? என்று தங்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லாமல் அடக்கமாக இருந்துவிட்டனரா !?

மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி என்று சொல்லி மிகப்பிரமாண்டமாக போட்டி போட்டுக்கொண்டு நடத்தி தங்களின் வலிமைகளை பலப்படுத்திக்காட்ட !? நினைக்கும் அவர்களுக்கு இது போன்ற உள்ளூர் பிரச்சனைகள் கவனத்தில் இல்லாமல் இருப்பது பெறும் வேதனையே !

'நமக்கேன் வம்புன்னு' !?  அவர்கள் ஒதுங்கக் காரணமென்ன !?

சேக்கனா M. நிஜாம்

Friday, February 1, 2013

அதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி !

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் இன்று இரவு 9.30 மணியளவில் சிறப்பாக துவங்கியது.

முதல் ஆட்டத்தை அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன், கீழத்தெரு மஹல்லா அமீர கிளையின் துணைத்தலைவர் சிஹாப்தீன் மற்றும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சேக் அலாவுதீன்,அஜ்மல்கான், அமீர் பாட்சா, அமானுல்லா [ சேட்டு ] ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நமதூரைச் சார்ந்த இரு அணிகள மோதிய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மின்னொளியில் இரவு ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சார்ந்த அணிகள் ஆட இருக்கின்றனர். நாளை நடைபெற இருக்கின்ற இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினகரன் செய்தி : பிலால் நகர் இரயில்வே கேட் திறப்பது எப்போது !?


அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் அதிரை பிலால் நகர் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக இரயில்வே கேட் திறப்பது எப்போது என்ற கோரிக்கையுடன் இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் களஆய்வு செய்து தினகரன் நாளிதழ் இன்று [ 01-02-2013 ] செய்தி வெளியிட்டுள்ளது.

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் !

கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முடிவின்படி சென்ற [ 22-01-2013 ] அன்று மாலை நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
அந்த கூட்டத்திற்கு AAMF' ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப் M.S. சிஹாப்தீன் அவர்கள் தலைமையிலும், AAMF'ன்  தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரின் முன்னிலையில் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : சகோ. அஹமது கபீர்

2. ஜாவியா பள்ளி வளாகத்தில் AAMF'ன் சார்பாக புதிய அலுவகம அமைத்து அதில் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஜாவியா நிர்வாகத்தினருக்கு அனுமதி கடிதம் கொடுப்பது என்ற முடிவையடுத்து, அடுத்த நாள் காலை ஹாஜி ஜனாப் M.S. சிஹாப்தீன் அவர்களின் தலைமையில் ஜாவியாவிற்கு சென்று இடம் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜாவியா நிர்வாகத்தினருக்கு AAMF'ன் சார்பாக அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 


3. ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் அவர்கள் தனது விருப்பமாகிய 'ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய இரு பெருநாள் தொழுகையை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரே இடத்தில் தொழ வேண்டும் என்றும், இதற்காக தொலைத்தூரங்களிலிருந்து வரும் நமது சகோதரர்களுக்காக வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுத்து, அத்தொழுகையை நமதூர் 'பெரிய ஜூம்ஆ' பள்ளியில் நடத்த வேண்டும் என்று தனது வேண்டுகோளை மீண்டும் அனைவரிடத்திலும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

4. நமதூர் பொது நலன் தொடர்பான மூன்று முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விரைவில் அணுகி துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் படி மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன,

முதல் கோரிக்கை :
பொருள் : அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது தொடர்பாக. 

ஐயா,
சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இவ்வூரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சென்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமகங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது.  மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !

இரண்டாவது கோரிக்கை :
பொருள் : பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார் குடிக்கும் மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தரக்கோருதல் தொடர்பாக.

ஐயா,
கடற்கரைப்பட்டினங்களில் ஒன்றாகிய அதிராம்பட்டினத்தில் ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வாசிக்கக்கூடிய மக்கள் மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்குச் சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

புதிதாக தொடங்கப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்ய வேண்டிய அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் உரிய நேரத்தில் பேருந்தைப் பிடித்து மன்னார்குடி செல்லவும், அதேபோல் காலையில் சென்னையில் இருந்துவரும் அதிராம்பட்டினம் பயணிகள் மன்னார்குடியில் இருந்து உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. ஆகவே மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கு சென்றுவர இருவழி அரசு போக்குவரத்தை ஏற்பாடு செய்து தரும்படி ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !

மூன்றாவது கோரிக்கை :
பொருள் : அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் தொடர்பாக.

ஐயா,
எங்கள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை செல்லும் ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலை சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந் நெடுஞ்சாலை இடையில் புதுப்பிக்கப்படாததால் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக ஆங்காங்கே காட்சியளிக்கின்றன. இச்சாலையில் நடந்து செல்பவர்கள் இடறி விழக்கூடிய சூழ்நிலையும் வாகனங்களில் செல்வோர் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. இச்சாலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் உள்ளனர். வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டுத்தளங்கள் ஆகியவையும் உள்ளன. மினி பஸ், கல்லூரி பேருந்து போன்ற போக்குவரத்தும் உள்ளது. ஆகவே மிக அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட இச்சாலையை போதிய நிதி ஒதிக்கீடு செய்து விரைவில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தருமாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !

நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர்
AAMF - அதிரை