.

Pages

Sunday, March 2, 2014

இரத்த தானத்தில் சாதனை நிகழ்த்திய 'அதிரை நியூஸ்' பங்களிப்பாளர் அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது !

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிரை நிருபராகவும், 'அதிரை நியூஸ்' வலைதளத்தின் முதன்மை பங்களிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று 25 வது தடவையாக இரத்தத்தை வழங்கி சாதனை புரிந்துள்ளார். இவர் இதுவரையில் 8 லிட்டர் 750 மில்லி கிராம் இரத்தம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

பிறருக்கு முன் மாதிரியாக மேலும் இரத்ததானங்கள் பல செய்து சமூகத்தொண்டை தொடர்ந்து செய்திடவேண்டும் என்ற வேண்டுகோளுடன் 'அதிரை நியூஸ்' சார்பில் A. சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும் இரத்ததானம் செய்த அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யது அவர்களுக்கும் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 அதிரை நியூஸ் குழு


அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பணியிட மாற்றமா !?

TNTJ தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியரை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்படிருந்த கண்டன வால்போஸ்ட்டர்களால் நகர மக்களிடேயே ஏற்பட்ட பரபரப்புக்கு மத்தியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் விரைவில் பணியிடம் மாற இருப்பதாக தகவல்கள் கசிவது மேலும் பரபரப்பாக இருக்கிறது.

கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா !

அதிரையின் பழமைவாய்ந்த அரசு பள்ளிகளில் ஒன்று கடற்கரைதெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கும் இந்த பள்ளியில் இப்பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேரு கல்வியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்களை உருவாக்கிய பெருமை இந்த பள்ளியைச்சாரும்.

ஆண்டுதோறும் இந்த பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமானது. நேற்று காலை நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.



Saturday, March 1, 2014

மரண அறிவிப்பு [ V.T. வாவூபிள்ளை மரைக்காயர் அவர்களின் மருமகன் ]


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா.செ. சேக் முஹம்மது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் V.T. வாவூபிள்ளை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.செ. அப்துல் ரவூப் அவர்களின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய வா.செ. முஹம்மது பாருக் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை பேருந்து நிலையம் - மகிழங்கோட்டை சாலையை சிரமைக்கும் பணிகள் மும்முரம் !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலையை சீரமைத்து தர அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, அதிரை வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக வலியுறுத்தியும், அவ்வபோது ஆர்பாட்டங்களும் செய்துவந்தன.

கடந்த [ 01-06-2013 ] அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களை அதிரை நியூஸ் சார்பாக அதிரை நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமதூருக்கு வருகை தந்த மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களிடமும் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளுக்குரிய டெண்டர் விடப்பட்டன. இதைதொடர்ந்து சாலையை சீரமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருங்கல் ஜல்லிகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் சாலையை பெயர்த்து எடுக்கும் பணிகள் JCP இயந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தினமும் இந்த பிரதான சாலையில் பஸ் உள்ளிட்ட வாகனங்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிகளவில் பயன்படுத்தி வருவதால் விரைவாக பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மரண அறிவிப்பு [ மேலத்தெரு MAC முத்து மரைக்காயர் ]


மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்த மர்ஹூம் MAC முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் MAC நெய்னா முஹம்மது, மர்ஹூம் MAC பக்கீர் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், KSM கமாலுதீன் அவர்களின் மச்சானும்,  மர்ஹூம் நிஜாம் முஹம்மது அவர்களின் மாமாவும், அப்துல் மஜீத், முகைதீன் அப்துல் காதர், AR சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும், செய்யது இப்ராஹீம், மர்ஹூம் நசீர் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய MAC முத்து மரைக்காயர் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரையில் நுகர்வோர் மனிதஉரிமை பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட K.M.A ஜமால் முஹம்மது அழைப்பு !

மனிதன் பிறக்கும் போதே மனித உரிமைகளும் அவனோடு சேர்ந்தே பிறக்கின்றது. ஜனநாயக நாடுகளில் மனித சமுதாய முன்னேற்றத்திற்கென ஜீவாதார அடிப்படை உரிமைகள் அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புகளில் சட்டமாக உள்ளன.

கிழக்கே தோன்றும் உதய கால வெளிச்சம் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துக் கொண்டு வாழத்தூண்டுகிறது ஆனால் மனித வாழ்வுக்கு தேவையான வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு பதில் பாதிப்படையச் செய்யும் பண்பு கெட்டவர்களே நம் மத்தியிலும் நம் நாட்டிலும் அதிகம்.

நுகர்வோர்கள் மனித உரிமை பாதுகாப்பிற்காக ஒன்றாக இணைந்து செயல்பட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இப்படிக்கு,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை

அதிரையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா ! கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம் !!

இன்று திமுகவின் மாநில பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அதிரை நகர திமுக இளைஞர் அணியின் சார்பில் இன்று காலை 9 மணியளவில் பழஞ்செட்டிதெரு பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திமுக இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக திமுகவின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகர நிர்வாகிகள், இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.