வடகிழக்கு பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பு, காட்டுக்
குளத்தை ஒட்டி இந்த ஆழ்துளை கிணறு அதிரை குடிநீர் பயன்பாட்டிற்காக
போடப்பட்டதாகும். பம்பிங் அறையின் அடித்தளத்தை சாலையின் மட்டத்திற்கு உயர்த்தி
மீதம் உள்ள குகைபோல் காட்சியளித்த கீழ் அடித்தளத்துக்கு குளத்து மண்ணை போட்டு மூடி
விட்டனர்.
தற்போது வடகிழக்கு பருவம் ஆரம்பித்த நிலையில்
ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகின்றது, நமதூர் பேரூர் நிர்வாகம் முயற்சி, இதன் விளைவாக
சி.எம்.பி வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.
அதிரையில் உள்ள எல்லாக் குளங்களும் நிரம்பனும் என்ற
நோக்கத்தோடு இந்த காட்டுக் குளமும் நிரம்பி விட்டது.
காட்டு குளத்துள்ளே தண்ணீ புல்லா ஏறிடிச்சீங்க,
பம்பிங் அறையின் அடியில் இட்ட மண் மெதுவா மெதுவா இறங்குதுங்க.
மீதி, இதில் உள்ள புகைப்படங்ககளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:-
குளத்தின்
நீர்மட்டம் சாலையை தொடும் அளவுக்கு வந்து விட்டது, அருகில் சிறார்களுக்கான
மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம், மேலும் இதனருகில் குடியிருப்பு வீடுகளும் உள்ளன சிறார்கள்
புழங்கும் இடமாகவும் இருக்கின்றது. ஆகவே, பொதுமக்களும், இவ்வழியே செல்லும்
மக்களும், இப்பகுதியில் குடியிருப்பவர்களும் மிகுந்த கவனத்தோடு இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and
Consumer Rights Included.
Thanjavur District Organizer.
Adirampattinam-614701.

.jpg)













































