.

Pages

Saturday, May 2, 2015

AFCC நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியின் கோப்பையை தஞ்சை அணி கைப்பற்றியது !

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] நடத்தும் 10 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த [ 18-04-2015 ] அன்று ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டிகளில் மாவட்ட அளவில் தலைசிறந்த பல்வேறு அணிகள் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை துவங்கியது. இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலீஸ், தஞ்சை ஸ்ரீ கணேஷ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் வெற்றி பெற்றனர். முன்னதாக தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் 159 / 10 எடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தொடர் போட்டியில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசை தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினரும்,தஞ்சை போலீஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை AFCC அணியினரும், நான்காம் இடத்தை தஞ்சை டிஸ்ட்ரிக் அணியும் பரிசுகளை பெற்றது. சிறந்த பந்து வீச்சாளருக்கான சிறப்பு பரிசினை சலீம் - AFCC அணியை சேர்ந்த சலீம், சிறந்த ஆல்ரவுண்டருக்கான சிறப்பு பரிசினை AFCC அணியை சேர்ந்த நிஜார், சிறந்த ஆட்ட நாயகன் விருதினை ஜோஸப், சிறந்த தொடர் நாயகன் விருதினை வினோத் ஆகியோர் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், விளையாட்டு ஆர்வலர்கள் முஹம்மது இல்யாஸ், முஹம்மது தமீம், AFFA நிர்வாகி சேக் தம்பி, முன்னாள் APCC வீரர் சாதுலி ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.

இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தாஜுதீன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை AFCC நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில்,சலீம், தமீம் மற்றும் AFCC ஏனைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்தனர்.

களத்திலிருந்து அதிரை சாலிஹ்

செக்கடி மேடு நடை பயிற்சி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு !

செக்கடி குளத்தை சுற்றி நடை பயிற்சி பாதை அமைத்து, நவீனப்படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். ஹாஜி A.M இக்பால், ஹாஜி M.S. உமர், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி S. முஹம்மது ஹசன், தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி M.M.S சேக் நசுருதீன், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலாளர் ஹாஜி S.M.S அஸ்லம், அதிரை பேரூராட்சி துணை தலைவர் என் பிச்சை, அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தனது 70 வயதிலும் தினமும் நடைபயிற்சியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வரும் நமதூர் சமூக ஆர்வலர் A.M.K அகமது அவர்கள் நடை பயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நமதூரின் பிரபல மருத்துவர் H அப்துல் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார்.

நமதூரின் பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய ஹாஜி ஜனாப் M.S தாஜுதீன் அவர்கள்  நடைமேடை பராமரிப்பு பொறுப்பை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். சிறுவன் அஹமது முகைதீன் கிராத் ஓதினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மஹ்ரிப் தொழுதவுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஜே. ஹாஜா கனி, 'உடற்பயிற்சியும், உணவுப் பழக்கமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

 

 

 
 


 
 
 

விறுவிறுப்பாக நடைபெறும் AFCC கிரிக்கெட் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் !

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] நடத்தும் 10 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த [ 18-04-2015 ] அன்று ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டிகளில் பல்வேறு அணிகள் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை துவங்கியது. இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலீஸ் அணி, தஞ்சை ஸ்ரீ கணேஷ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் பேட்டிங் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் 159 / 10 எடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்றைய இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட AFFA நிர்வாகிகள் செய்யது முஹம்மது புஹாரி ( ஆதம் டெக்டைல்ஸ் ), அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சேக் தம்பி, சமீயுல்லா, அஹமது அனஸ், 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது, கிரிக்கெட் பயிற்சியாளர் பாப்பாநாடு ராஜா ஆகியரோடு AFCC நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தனர்.

இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், இஸ்மாயில் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்சிகள் அனைத்தையும் தாஜுதீன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை AFCC நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில்,சலீம், தமீம் மற்றும் AFCC ஏனைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

போட்டி முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தொடர் போட்டியில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறது.

களத்திலிருந்து அதிரை சாலிஹ்

மரண அறிவிப்பு !

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.S. ஷஹீது மரைக்காயர் அவர்களின் மகனும், மீரா மெடிக்கல்ஸ் மர்ஹூம் மீ.செ முஹம்மது காசிம், மர்ஹூம் M.S. அப்துல் மஜீது, M.S அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய M.S முஹம்மது மீராஷா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரையில் நுங்கு சீசன் துவங்கியது: ₹10 க்கு, 5 சுளைகள் !

கோடை காலத்தில் மக்களின் சூட்டைத் தணிக்கும் நுங்கு சீசன் அதிரையில் துவங்கியுள்ளது. அதிரையை சுற்றி காணப்படுகிற மகிழங்கோட்டை, தொக்காளிகாடு, பழஞ்சூர், மளவேனிற்காடு, ராசியங்காடு, மஞ்சவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலிருந்து நுங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது கோடை வெப்பம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் நுங்கு சுளைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  ₹ 10 க்கு, 5 சுளைகள் வீதம் விற்க்கப்படுகிறது. இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரிகள் கூறுகின்றனர்.
 

அதிரை சேர்மனின் வால் போஸ்ட்டர் நன்றி அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி, அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை வால் போஸ்ட்டர் அறிவிப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் சார்பில் அதிரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்ட்டரில் கூறியிருப்பதாவது: