.

Pages

Tuesday, May 5, 2015

சிறுவர்களை கவரும் செக்கடி குளம் பூங்கா !

செக்கடி குளத்தை சுற்றி நடை பயிற்சி பாதை அமைத்து, நவீனப்படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

செக்கடி மேடு நடை பயிற்சி பாதையில் சிறுவர்கள் ஒன்றாக விளையாடும் நோக்கில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சறுக்கை, ஊஞ்சல் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது அதிரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் நமதூர் சிறுவர்கள் கோடை விடுமுறையை உள்ளூரில் குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிடைக்கும் காலை, மாலை நேரங்களில் ஒன்றாக கூடும் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பூங்காவில் பொழுதை கழித்து வருகின்றனர். நேரம் போவது தெரியாமல் விளையாடி வருகின்றனர். இவர்களின் குதுகலத்தை காணும் பெற்றோர்கள் ஆனந்தமடைகின்றனர்.

குறிப்பு: எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகள், செக்கடி குளம் பூங்காவில் விளையாடும் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.
 
 
 

அமீரகம் முதல்.....அதிரை வரை....!


அமீரக வாழ் அதிரையர்களின் கவனத்திற்க்கு இன்ஷா அல்லாஹ் அமீரகத்திலிருந்து சென்னை வழியாக அதிரை செல்பவர்கள் ஷேரிங் மூலமாக இனைந்து அதிரை செல்ல அறிய வாய்ப்பு.

நேரம்/காலம் : 07-05-2015 வியாழன்
விமானம் : ஏர் இந்தியா

இன்ஷா அல்லாஹ் வெள்ளி கிழமை சரியாக காலை 10 மணிக்கு சென்னையுலிருந்து வாகனம் புறப்படும்.

மேலும் தகவல்களுக்கு உடன் தொடர்புக்கொள்ளவும் 00971554737421

Monday, May 4, 2015

அதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டம் [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாத மாதந்திர கூட்டம் அலுவலகத்தில் கடந்த [ 30-04-2015 ] அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
 
 
 
 
 

அதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்கள்:
 
 
 
 

அதிரையில் கோலாகலமாக துவங்கியது கால்பந்தாட்ட தொடர் போட்டி: முதல் நாள் ஆட்டத்தில் நாகூர் அணி வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று [ 04-05-2015 ] மாலை 5 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் நாகூர் அணியினரும், காரைக்குடி பள்ளத்தூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் நாகூர் அணியை சேர்ந்த பக்கர் முதல் கோலை அடித்து தனது அணி வெற்றிபெற உதவினார். ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய எம்எஸ் ஷிஹாபுதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக ஷபா ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை அணியினரோடு ஆலத்தூர் அணியினரும், இரண்டாவது ஆட்டமாக பிச்சினிக்காடு அணியினரோடு, மேலநத்தம் அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.
 
 
 
 

அதிரையில் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக கோடைகால பயிற்சி பகுப்பு இந்த வருடம் 2.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது. ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும், பெண்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 6.00 மணிவரை புதுமனைத்தெருவில் உள்ள தவ்ஹீத் மதரஸா அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியிலும் நடைபெறுகிறது.

பெண்களுக்கான வகுப்புகளை மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்கள் பாடம் நடத்துகிறார்கள் இதில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிகமான மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருவதாக நிருவாகிகள் தெரிவித்தனர்.
 

ஷார்ஜாவில் பார்வையாளர்களை கவர்ந்த எந்திர‌ டைனோசர் !

ஷார்ஜா புத்தக ஆணையம் சார்பில் குழந்தைகள் வாசிப்பு திருவிழா 7வது ஆண்டு கண்காட்சி மையத்தில் கடந்த 22ந்தேதி தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இவ்விழா நிறைவடைந்தது. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்தரங்கங்கள் நடைபெற்றது.  சர்வதேச எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எகிப்து எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர் அஞ்சனா வஸ்வானி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேலும் குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சியும் மற்றும் பிரம்மாண்ட டைனோசர்கள் வடிவமைப்பில்  செயற்கையாக அசைவுகளோடு உருவாக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான‌ பார்வையாளர்கள் வந்து சென்றனர்.

நன்றி: தினகரன்

துபாயில் நவீன வாகன கண்காணிப்பு கேமராக்கள் !

துபாய்: துபாயில் சாலைகளில் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் அதிநவீன வாகன கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பழைய கேமராக்களுக்கு பதில் இப்புதிய நவீன வகை கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இக்கேமராக்கள் விதிகளை மீறி அதிவேகமாக ஒட்டுவதை மட்டுமல்லாமல்   விதி மீறல்களான ,செல்போனில் பேசி கொண்டேஓட்டுதல், அதி வேகமாக ஓட்டுதல்,மிக மெதுவாக ஓட்டுதல், வாகனங்களுக்கு இடையேயான‌ இடைவெளி இல்லாமல் ஓட்டுதல் ,சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல்கனரக வாகனங்கள் தங்களுக்கான சாலையை மீறி ஓட்டுதல், கனரக வாகனங்களுக்கான நேரத்தை மீறி ஓட்டுதல், உள்ளிட்ட பல்வேறு வகையான விதி மீறல்களை படம் பிடித்து பதிவு செய்யும் .

இக்கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நான்கு வகையான வாகன‌ கண்காணிப்பு தொழில்நுட்ப கேமராக்கள் பயனபடுத்தப்படுகிறாது சென்சிஸ்,லக்ஸ், லேசர் கன்,மற்றும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் வைட்ரானிக் தொழிட்நுட்பம் உள்ளிட்டவையாகும். எனவே விதிமுறைகளை மீறுவோர் கண்காணிப்புக்குள்ளாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாவர்கள் எனவே வாகன ஓட்டி மிகுந்த எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:தினகரன்

வாய்க்கால் தெரு அருகே அறுந்து தொங்கும் மின்கம்பியை சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் ஆத்திரம் !

அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள மின்கம்பம் ஒன்றில் மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருப்பதால் அப்பகுதியினர் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். மின் கம்பி அறுந்து சில மணி நேரம் ஆகியும் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இரண்டு காக்கைகள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே இந்த பகுதியினர் மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

கடைசி செய்தி:
அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரிசெய்தனர்.