.

Pages

Wednesday, March 2, 2016

சவூதியில் அதிரையருக்கு விருது!

சவூதி அரேபியா ஜித்தாவில் அதிரையை சேர்ந்த ரஃபியா அஹமது அவர்களுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சவூதி அரேபியா ஜித்தாவில் இம்பாலா கார்டனில், கடந்த வெள்ளியன்று இந்தியன் சோசியல் ஃபாரம் சார்பில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹல்கான் பாகவி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளில் சிறந்த பங்காற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன் ஒரு நிகழ்வாக அதிரையை சேர்ந்த ரஃபியா அஹமது அவர்களுக்கு சிறந்த தன்னலமற்ற சேவை செய்து வருகிறமைக்காக விருது வழங்கப் பட்டது.

மேலும் மறைந்த ஜித்தா தமிழ் சங்க தலைவர் அப்துல் மாலிக் அவர்களுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. இதனை ரஃபியா அஹமது அவர்களிடமே வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக பெரும்பாலான அதிரையர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Tuesday, March 1, 2016

அமெரிக்கா கலிபோர்னியாவில் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் செல்வி மஹதியா மரணம் !

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு முஹம்மது சாலிஹ், மர்ஹூம் பஷீர் அஹமது ஆகியோரின் பேத்தியும், முகம்மது இக்பால் அவர்களின் மகளுமாகிய செல்வி மஹதியா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் அமெரிக்கா கலிபோர்னியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அமெரிக்கா கலிபோர்னியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

'இல்லந்தோறும் இணையம்' திட்டம் துவக்கம் !

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

"அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்" என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தமிழக அரசின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023ல் குறிப்பிட்டபடி, மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவித்திடும் வகையில் சென்னை – தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் மையம் (Startup Warehouse); மாணாக்கர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்காக மேகக்கணினி சார்ந்த சேவைகள்  மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை  குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம்;

சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி உள்கட்டமைப்பினை சிறப்புற பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் செய்யும் பொருட்டு 10 கோடியே 41 லட்சம் ரூபாய்  செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேகக்கணினிய  அமைப்பு என மொத்தம் 13 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

பிலால் நகரில் அதிமுகவிலிருந்து 20 பேர் விலகி திமுகவில் இணைந்தனர் !

திமுக மாநில பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று காலை அதிரை பேரூர் திமுக சார்பில் பிலால் நகரில் கொடிஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் இந்த பகுதியை சேர்ந்த தம்பு ரஹ்மத்துல்லா தலைமையில் 20 பேர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். திமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

திமுக அதிரை பேரூர் இளைஞர் அணி செயலளார் நியாஸ் அஹமது திமுக கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக திமுக அதிரை பேரூர் இணை செயலாளர் தில்லை நாதன் உரை நிகழ்த்தினார். விழா முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள், சாதிக் மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின் பிறந்த நாள்: அதிரையில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !

திமுக மாநில பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று காலை அதிரை பேரூர் திமுக சார்பில் கொடிஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே.ஜே சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இதில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் திமுக  கொடி ஏற்றி வைத்து பிறந்த தின உரை நிகழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை சேர்மன் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் குடிநீரை பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அளித்த உறுதியின்படி இன்று காலை வரை குடிநீர் சீராக வழங்கப்படவில்லை இதனால் அதிருப்தி அடைந்த இந்த பகுதியினர் அதிரை சேர்மன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் வெளியேறிவரும் குடியிருப்பு கழிவு நீரை தடுத்து வாய்க்கால் அமைத்து தருதல், பம்பிங் மூலம் ஆற்றுநீரை காட்டுக்குளத்திற்கு கொண்டு வர பைப் பாதை அமைக்க உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் ஏற்படும் நிர்வாக அலுவலர்களின் தாமதத்தை கண்டித்து போராட்டம் நடந்தது.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சமூக ஆர்வலர்கள் முஹம்மது இப்ராஹீம், ஜெஹபர் அலி, கவுன்சிலர் முஹம்மது யூசுப், சன் டீ முனாஃ ப், சகாபுதீன், அயூப், ஜாஹிர், மல்ஹர்தீன், சாகுல் ஹமீது, அனஸ், கமாலுதீன், சைஃபுதீன் உள்ளிட்ட அதிரை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதிரை காவல் நிலைய போலீசார் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணிகள் உதவி இயக்குனர் தொலைபேசியில் அளித்த உறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

மரண அறிவிப்பு ! ( ராழியா அம்மாள் அவர்கள் )

ஆஸ்பத்திரிதெருவை சேர்ந்த மர்ஹும் செ.ஓ சேக் முஹம்மது அவர்களின் மூத்த மகளும், மர்ஹும் எஸ்.எம் சேக் மீரான் அவர்களின் மனைவியும், அஹ்மத் அன்சாரி,உமர் அலி ஆகியோரின் தாயாரும், மர்ஹும் முஹம்மது உஜைர் அவர்களின் மாமியாருமாகிய ராழியா அம்மாள் அவர்கள் இன்று காலை  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

சவூதி ரியாத்தில் சமூக நல அமைப்பின் மகத்தான மனிதநேய பணி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் ஷீலாரஞ்சனி (மனைவி) ஆஷா பிரியதர்ஷினி (மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வேலை பார்த்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டபட்டு வந்தவரை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று  ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நலத்துறை நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

தொடர் முயற்சியின் பலனாய் 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட SDPI தலைவருக்கு தெரிவித்தன் அடிப்படையில் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார்.

பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

சவூதி அரேபியாவில் செயல்பட்டு வரும் சமூக நல அமைப்பான இந்தியன் சோஷியல் ஃபோரம் பல்வேறு சமூக நல பணிகளை SDPI கட்சியின் சமூக நல துறையின் வழிகாட்டலை மேற்கொண்டு சிறப்பாக செயலாற்றி இந்தியர்களின் துயர் துடைப்பது குறிப்பிடத்தக்கது.