.

Pages

Sunday, July 2, 2017

அமீரகத்தில் ஜூலை 1 முதல் புதிய போக்குவரத்து அபராதங்கள் அமல் ( முழுவிவரம் )

அதிரை நியூஸ்: ஜூலை 02
அமீரக பெடரல் போக்குவரத்து சபை மற்றும் துபை போக்குவரத்து போலீஸ் ஆகியவற்றால் கடந்த மாதங்களில் அறிவிக்கப்பட்ட புதிய போக்குவரத்து அபராத சட்டங்கள் நேற்று ஜூலை 1 முதல் அமுலுக்கு வந்தன. இத்தகைய கடும் சட்டங்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதல்ல மாறாக சாலை போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதே என மேஜர் ஜெனரல் முஹமது ஸைஃப் அல் ஸபைன் தெரிவித்தார்.

புதிய சட்டங்கள் உங்கள் பார்வைக்கு:

https://www.facebook.com/GulfNews.UAE/videos/1547741275292125/

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அபுதாபியில் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை அமல் !

அதிரை நியூஸ்: ஜூலை 02
அபுதாபியில் புதிய ரெஸிடென்ட் விசா பெறுவதற்கு அல்லது பழைய ரெஸிடென்ட் விசாவை புதுப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்கள் மற்றும் GDRFA இயக்குனரகம் வழியாகவே இதுவரை விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

இனி அபுதாபி ரெஸிடென்ட் விசாவை பெற விரும்புவோர் தாமாகவே ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். https://echannels.moi.gov.ae என்ற இணைய சுட்டியினுள் சென்று ஆன்லைன் வழியாகவே தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பரிசீலணைக்குப் பின் விசா அனுமதி கிடைத்தவுடன் இறுதியாக பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்பிங் செய்வதற்காக மட்டும் குடியுரிமை மற்றும் வெளியுறவுத்துறைக்கான பொது இயக்குனரக அலுவலகம் (General Directorate for Residency and Foreign Affairs - GDRFA) சென்றால் போதுமானது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள டைப்பிங் சென்டர் மற்றும் GDRFA இயக்குனரகம் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும். அபுதாபி மண்டலத்தில் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்கள் குறித்து அறிந்து கொள்ள www.adnrd.gov.ae என்ற இந்த சுட்டியை பார்க்கவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

முகமே பாஸ்போர்ட் - ஸ்மார்ட் விமான நிலையமாக மாறும் துபாய் டெர்மினல் 3

அதிரை நியூஸ்: ஜூலை 02
துபாய் விமான நிலையங்களில் பல்வேறு நவீனங்கள் புகுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் தான் பாஸ்போர்ட் இன்றி நம்முடைய ஸ்மார்ட் போன்களை மட்டும் உபயோகித்தே பயணம் செய்யக்கூடிய திட்டத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனினும் ஒருபடி மேலாக நம்முடைய முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து செக்-இன் கவுண்டர் பணிகளையும், இமிக்கிரேசன் சோதனைகளையும் முடிக்கும் பயோமெட்ரிக் ஸ்மார்ட் கேட் திட்டத்தை துபை கஸ்டம்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபை இமிக்கிரேசன், துபை போலீஸ், துபை ஏர்போர்ட் நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து ஆரம்பமாக துபை டெர்மினல் 3ல் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு இச்சேவையை வழங்கவுள்ளது.

எதிர்வரும் 12 முதல் 18 மாதங்களுக்குள் கட்டமைப்புபணிகள் நிறைவுற்று நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் ஸ்மார்ட் கேட் திட்டம் விரைவில் துபையின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போதுள்ள ஸ்மார்ட் கார்டு திட்டம், மனிதர்களால் நேரடியாக கையாளப்படும் இமிக்கிரேசன் கவுண்டர்கள், ஸ்மார்ட் இ-கேட் திட்டம், யுஏஈ வேலட் திட்டம் ஆகியவையும் குறிப்பிட்ட சில காலத்திற்கு தொடரும் என்றாலும் டெர்மினல் 3ல் முகத்தை ஸ்கென் செய்து பயணம் செய்யும் திட்டம் மட்டுமே முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முகத்தின் அழகு அகத்தில் தெரியும் என்பது வெறும் சொல்லல்ல, அது இன்றைய நிஜம். உங்கள் முகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இனி அவை தான் உங்கள் பாஸ்போர்ட்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

Saturday, July 1, 2017

சைக்கிளுக்கு வயது 200 ~ ஓர் சிறப்புப் பார்வை (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 01
நீள அகல உயரத்திலும், விளையாட்டு போட்டிகளுக்கான சைக்கிள்களாகவும், எடையிலும், கியர் பொருத்தப்பட்டவைகளாகவும், மோட்டார் சைக்கிள்களாகவும் இன்று சைக்கிள்கள் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை வெற்றிகரமாக கடந்துள்ள போதிலும் இன்னும் தனது மெருகும் தேவையும் சற்றும் குறையாமல் இந்நவீனயுகத்திலும் தனக்கென ஒரு தனியிடத்துடன் உள்ளது சைக்கிள்கள்.

சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 200 வருடங்களாகின்றன. ஆரம்பத்தில் பல்வேறு வினோத வடிவங்களில் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய பழமையான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேகரித்து பிரான்ஸ் நாட்டின் டொமாசன் (Domazan) எனும் நகரில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

இந்த சைக்கிள் அருங்காட்சியகத்தில் காரல் டிரைஸ் (Karl Drais) எனும் ஜெர்மானியர் 200 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக குதிரை தோற்றத்தில் வடிவமைத்த சைக்கிள்கள் உட்பட பல பழமையான சைக்கிள்கள் உள்ளன. அவற்றின் புகைப்படங்களுடன் இணையத்தில் கிடைத்த சில பழமையாக சைக்கிள்களின் போட்டோக்களையும் உங்களின் ரசனைக்காக சமர்ப்பிப்பதில் மகிழ்கின்றோம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரையில் குர்ஆன் முழுமையாக மனனம் செய்தல் போட்டியில் ரஹ்மானியா பள்ளி / புதுப்பள்ளி மாணவர்கள் சாதனை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏ.ஜே ஜூம்மா மஸ்ஜித் அல் ஹிதாயா இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, அதிரை மகாதிப் இணைந்து நடத்திய, திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி அதிராம்பட்டினம் ஏ.ஜே ஜூம்மா மஸ்ஜித் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குர்ஆன் முழுவதும் மனனம் செய்தல் போட்டியில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளி, புதுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு, ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் நிர்வாகி அ.மு.க அமீன் ஹாஜியார் தலைமை வகித்தார். அதிரை மகாதிப் மதரஸா ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம், குர்ஆன் முழுவதும் மனனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏஜே ஜும்மா மஸ்ஜித், புதுப்பள்ளி, செக்கடி பள்ளி, முகைதீன் ஜூம்மா பள்ளி, அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி, சித்திக் பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, கலீபா உமர் (ரலி) பள்ளி, ரஹ்மானியா பள்ளி, மக்தூம் பள்ளி உட்பட 20 பள்ளிகளை சேர்ந்த மக்தப் மதரஸா மாணவர்கள் 187 பேர் கலந்துகொண்டனர்.

இதில், அதிராம்பட்டினம் சலாஹ்ஹியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி இப்ராஹீம், இஜாபா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி, மவ்லவி பரக்கத்துல்லா, மவ்லவி ஜபருல்லா, மவ்லவி நூர் முஹம்மது மற்றும் மக்தப் மதரஸா ஆசிரியர்கள் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

போட்டி முடிவில், குர்ஆன் முழுமையாக மனனம் செய்தல் போட்டியில் அப்துல் சுக்கூர் ( த/பெ. யாக்கூப் உசேன் ) ரஹ்மானியா பள்ளி மாணவர் முதல் இடமும்,  புதுப்பள்ளி மாணவர் ஜெய்து இரண்டாம் இடமும், அப்துல் ஹமீது ( த/பெ. அகமது சரீப் ) ரஹ்மானியா பள்ளி மாணவர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ. 5,500 ரூ. 4,500 ரூ. 3,500 ஆகிய ரொக்கம் மதிப்புள்ள ஷோபா பர்னிச்சர் செட் வழங்கப்பட்டது.

1 ஜூஸ்வு முதல் 15 ஜூஸ்வு வரை குர்ஆன் மனனம் செய்தல் போட்டி முடிவில், முஹம்மது ( த/பெ. மவ்லவி முஹம்மது யூசுப் ) ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் மாணவர் முதல் இடமும், அகமது ( த/பெ. மவ்லவி முஹம்மது யூசுப் ) ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் மாணவர் இரண்டாம் இடமும், ஜாஸின் ( த/பெ. ஜமால் முகமது ) சித்திக் பள்ளி மாணவர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ. 3,500 ரூ. 2,500 ரூ. 1,500 ஆகிய ரொக்கம் மதிப்புள்ள நாற்காலி பர்னிச்சர் செட் வழங்கப்பட்டது.

விழாவில், சிறப்பு விருந்தினராக சென்னை சூளைமேடு மதரசத்தூன் நூர் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி முஹம்மது கோயா அலி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரி துணை முதல்வர் மவ்லவி சக்கில் அகமது ரஷாதி முப்தி கலந்துகொண்டு 'குர்ஆன் ஓர் அற்புதம்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடக்கத்தில், ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம் நஜ்முதீன் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். விழா முடிவில் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மக்தப் மதரஸா மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி: அபூ அஜீம்
 
 
 
 
 
 
 

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூலை 01
சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கும் வகையில், அதிராம்பட்டினம் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் ஹனி சேக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் புங்கன், பூவரசு, வேம்பு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. கன்றுகளைப் பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரபீக் உட்பட தன்னார்வல இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில், அதிராம்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு தன்னார்வ இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
 
 
 

தஞ்சை மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க கடனுதவி !

கோப்புப்படம் 
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கோழிப்பண்ணை தொழில் ஊக்குவிக்கும் நோக்கத்தில் கோழி அபிவிருத்தித் திட்டத்திற்காக ரூ.18.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோழி பண்ணை அமைக்க கடனுதவி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 05.07.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘’ கோழி அபிவிருத்தித் திட்டத்தினை’’ ரூ. 18.75 கோடி செலவில் 2017 – 2018ம் ஆண்டிற்கு   செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  தணு;சாவ+ர்  மாவட்டத்திற்கு   160  நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் / தனிநபர் தொழில் முனைவோர் / சுய உதவிக்குழுக்கள்  ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள்.  கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது  குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.  கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில்  ஆர்வம்  உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம்.
நாட்டுக்கோழிப்பண்ணை 160 வரை அமைப்பதற்கான கோழிக்கொட்டகை கட்டும் பணி, உபகரணங்கள், கோழித்தீவனம், கோழிக்குஞ்சுகள் வாங்குதல், அசோலா உ ற்பத்தி போன்றவை அமைக்க ஆகும் மொத்த செலவில், 25 சதவீதம் முன் மானியம் தமிழக அரசு வழங்குகின்றது.

தேர்வு செய்யப்பட்ட  பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கானச் சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை / உதவி  இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அவர்களிடம் 05-07-2017 தேதிக்குள்  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.