.

Pages

Wednesday, August 2, 2017

பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் மற்றொரு ஆண் குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி !

அதிரை நியூஸ்: ஆக. 02
மும்பை அருகிலுள்ள தானே (Thane) நகரின் மும்ப்ரா (Mumbra) பகுதியில் 19 வயது இளம் தாய்க்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று தன்னோடு உருவான இன்னொரு இரட்டைச் சகோதரனை கருவாக தன் வயிற்றினுள் சுமந்த நிலையில் பிறந்தது.

இதுபோன்ற கரு வளர்ச்சியை monozygotic twin pregnancy என குறிப்பிடுவர். இத்தகைய இரட்டை பிறப்புக்கள் உலகில் இதுவரை சுமார் 200க்குள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. பிறந்த அந்த ஆண் குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் போதும், பிறந்த பின்பும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்ததன் மூலம் இந்த முரண்பட்ட கரு வளர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

பிறந்த சிசுவின் வயிற்றுக்குள் இருந்த அந்த இன்னொரு அரைகுறை கரு சுமார் 7 செ.மீ அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்ததுடன் அதன் மூளை, கை மற்றும் கால்கள் வளர்ந்திருந்தன என்றாலும் மண்டை ஓடு வளரவில்லை.

குழந்தையின் வயிற்றிலிருந்த அந்த இன்னொரு ஆண் கரு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து குழந்தை தற்போது உடல்நலம் தேறி வருகிறது. மேலும், விரைவில் தாய்ப்பால் அருந்தத் துவங்கும் என டாக்டர் நீனா நிச்லாணி தலைமையிலான மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Source: Msn / Mirror
தமிழில்: நம்ம ஊரான்

நடுவானில் ஸ்ரீ லங்கன் விமானத்தில் மொபைல் போன் பேட்டரியால் தீ

அதிரை நியூஸ்: ஆக. 02
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகையால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. எனினும், விமான ஊழியர்களின் சமயோசிதத்தால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

விமானம் 202 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 70வது நிமிடத்தில் பயணிகளின் தலைக்கு மேல் அமைந்துள்ள பொருட்கள் வைக்கும் கேபின் லாக்கர் ஒன்றிலிருந்து திடீர் என கடும் புகை பரவியது. சுதாரித்துக் கொண்ட விமானப் பணியாளர்கள் Extinguisher எனும் தீ அணைப்பான் மூலம் தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லாமல் போகவே சம்பந்தப்பட்ட பையை நீருக்குள் முக்கி அணைத்தனர்.

பயணி ஒருவருக்குச் சொந்தமான எரிந்த அந்தப் பையை சோதித்த போது 2 மொபைல் போன்களும் மொபைல் போனுக்கு பயன்படுத்தும் ஒரு லித்தியம் பேட்டரியும் இருந்தது தெரிய வந்தது. இந்த விபத்தால் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற சர்வதேச விமான நிறுவனங்களைப் போலலே ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் சாம்சங் நோட் 7 வகை மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் ஆபத்திலிருந்து விமானத்தை காத்த விமான பணியாளர்களுக்கு அந்நிறுவனம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

Source: Msn / AFP 
தமிழில்: நம்ம ஊரான்

இந்தியாவில் தினம் ஒருவரை கொல்லும் காட்டு விலங்குகள்!

அதிரை நியூஸ்: ஆக. 02
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஏப்ரல் மாதம் முதல் 2017 மே மாதம் வரையிலான 1,143 நாட்களில் சராசரியாக தினம் ஒருவர் என 1,144 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இதற்கு மாற்றாக மனிதனால் குறிப்பாக சட்டவிரோத வேட்டைக்காரர்களால் தினம் ஒரு சிறுத்தை கொல்லப்படுகிறதாம் அதாவது 2014 ஜனவரி மாதம் முதல் இன்று வரை 1,436 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

யானைகளால் 1,052 பேரும், புலிகளால் 92 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் மனிதனால் மேற்படி காலகட்டத்தில் 345 புலிகளும் 85 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஏட்டுக்கணக்குகளுக்கு மேல் அதிகமான மிருகங்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்கவில்லை.

ஊருக்குள் புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் அதிகம் தாக்கப்படுவதன் காரணம் வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து அழிப்பதாலேயே ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் வீடு, வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், மனிதர்கள் காயமடைவதும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பின் படி, சுமார் 30,000 யானைகளும், உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சரிபாதி சுமார் 2,226 புலிகளும், சுமார் 12,000 முதல் 14,000 வரையில் சிறுத்தைகளும் வாழ்கின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் ஜெயிலை சேதப்படுத்திய கைதிக்கு 44,600 திர்ஹம் அபராதம் விதிப்பு

அதிரை நியூஸ்: ஆக.02
துபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறைபட்டிருந்த இமாராத் கைதி ஒருவர் சக கைதிகள் மற்றும் போலீஸார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் ஜெயில் சொத்துக்களை நாசம் செய்ததற்காகவும் 44,600 திர்ஹம் நஷ்டஈடு செலுத்துமாறு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்குமாறும் துபை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31 வயது இமாராத் கைதி ஒருவர் புகைப்பிடிக்க சிகரெட் கேட்டு கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு தன்னுடைய படுக்கையிலிருந்த மெத்தையை லைட்டர் மூலம் தீயிட்டு எரித்துள்ளார். மேலும் எரிந்து கொண்டிருந்த மெத்தையை கைதிகள் உணவருந்தும் பகுதியில் வீசியதுடன் முழு சிறைச்சாலையையும் எரித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

சிகரெட் கேட்டு அந்த கைதி செய்த அளப்பரை 3 வருட வழக்கு விசாரணைக்குப்பின் சேதமான ஜெயிலை பழுதுபார்ப்பதற்கான நஷ்டஈடாக 44,600 அபராதம் செலுத்த வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளது.

சினங்கொண்ட சிங்கத்த கூண்டுல அடைச்சா அந்த கூண்டையே செதச்சிடும் பரவாயில்லையா... என்ற காமெடி நினைவுக்கு வருதா!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, August 1, 2017

வெளிநாடுவாழ் இந்தியர்களின் சமூக நல நிதியை மேலும் பல திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி!

அதிரை நியூஸ்: ஆக. 01
இது இந்திய அரசு ஓதுக்கும் நிதியல்ல மாறாக அரசால் தூதரகங்கள் வழியாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து வசூலித்து சில பாரதூரமான துன்பியல் சூழலில் சிக்கித் தவிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இந்த 'சமூக நல நிதி'. Indian Community Welfare Fund (ICWF) சுருக்கமாக இதுவும் ஓர் 'நமக்கு நாமே திட்டம்'

வெளிநாடுவாழ் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புதுப்பித்தல், அபிடவிட் வேண்டுதல் போன்ற பல பணிகளுக்காக இந்திய தூதரகம், கவுன்சலேட்டுகள் மற்றும் அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகளை அணுகும்போது சேவைக்கட்டணத்துடன் சேர்த்து இந்த நிதியையும் வசூலித்து விடுவார்கள். மேலும் சில பொழுதுகள் நன்கொடைகள் பெற்றும் இந்நிதியில் சேர்க்கப்படும்.

2012 ஆம் ஆண்டு வரை இந்த வகையில், அமீரகத்தில் மட்டும் சேர்ந்த தொகை சுமார் 15.35 மில்லியன் திர்ஹமாகும் இவற்றில் செலவான தொகை சுமார் 4.95 மில்லியன் திர்ஹம் மட்டுமே. எஞ்சியவை சேமிப்பாக வைக்கப்படும் 2012 ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை வசூலானது எவ்வளவு, செலவு செய்யப்பட்டவை எவ்வளவு என்ற கணக்கு இதுவரை வெளியாகவில்லை.

இந்தத் சமூக நல நிதியை கொண்டு பொதுவாக நிர்க்கதியாய் நிற்கும் வீட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குச் செல்ல உதவுதல், நாதியற்ற இந்தியர்களின் சடலங்களை அனுப்புதல், அமீரகத்தில் உள்ள இந்திய சமூக நல ஊழியர்களுக்கான தினசரி செலவுகள், தொழிலாளர்களின் தகுதியான வழக்குகளின் ஆரம்பகட்ட சட்ட ஆலோசணைகள் வழங்குதல் தொடர்பான செலவுகள் மற்றும் இந்திய தொழிலாளர் வள மையங்களை நிர்வகித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்படுகின்றது.

இந்த சமூக நல நிதியை கொண்டு வன்முறை மற்றும் போர் சூழலால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஏமன், லிபியா, ஈராக், தெற்கு சூடான் போன்ற நாடுகளிலிருந்தும், 2013 சவுதியில் கொண்டு வரப்பட்ட நிதாகாத் சட்டங்களால் பாதிக்கப்பட்டும் முறையான ஆவணங்கள் இல்லாததால் தவித்த இந்தியர்கள் பலரை வெளியேற்றவும், சமீபத்தில் நிறைவடைந்த பொது மன்னிப்பு காலத்திலும் இந்தியர்களை வெளியேற்ற அமீரக சமூக நல நிதி சேமிப்பிலிருந்து ஒரு பகுதி தொகை மடைமாற்றப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு திரு வயலார் ரவி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தத் சமூக நல நிதியிலிருந்து அமீரகத்தில் இறுதிச்சடங்கு வளாகம் (crematorium) ஒன்றை ஏற்படுத்தவும், 2 சமூக நல மையங்களை (2 community centres in the UAE) ஏற்படுத்தவும் அனுமதியளித்திருந்தார்.

கடந்த வாரம் கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தின் முடிவில் இந்த சமூக நல நிதியை வெளிநாடுவாழ் இந்தியர்களின் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், முன்பு போல் ஒவ்வொரு தேவைக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையில்லை எனவும், இந்திய தூதரக அதிகாரிகளே தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்து சமூக நல நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

என்னென்ன வகையாக கூடுதல் புதிய திட்டங்களுக்கு சமூக நல நிதியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் வழிகாட்டல் சுற்றறிக்கை வந்தப்பின் தான் இதுகுறித்த கூடுதல் விபரங்களை தர முடியும் என துபையிலுள்ள கவுன்சலர் திரு. விபுல் அவர்கள் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினத்தில் 29.90 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், ஆக. 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கத்தை வீட கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 29.90 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக வெட்டிக்காடு 131 மி.மீ, பட்டுக்கோட்டையில் 26.20 மி.மீ, பேராவூரணி 65 மி.மீ, மதுக்கூரில் 2.40 மி.மீ, கருங்குளம் 43 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

மரண அறிவிப்பு ~ கமாலுதீன் (வயது 47)

அதிரை நியூஸ்: ஆக. 01
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அன்னப்பச்சி ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது புஹாரி அவர்களின் மச்சானும்,
அப்துல் மஜீது அவர்களின் சகோதரரும், நாசர்கான், ரியாஸ் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய கமாலுதீன் (வயது 47) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2017) மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.

ஹஜ் செய்திகள்: நாட்டிற்காக உயிர்நீத்த 1000 எகிப்திய ராணுவத்தினர் வாரிசுகள் ஹஜ் செய்ய மன்னர் சார்பாக ஏற்பாடு

அதிரை நியூஸ்: ஆக. 01
ஓவ்வொரு ஆண்டும் சவுதி மன்னரின் சார்பாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகையினருக்கு ஹஜ் கடமைகளை சவுதி அரசின் முழுச்செலவில் நிறைவேற்றுவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு சுமார் 400 நிர்க்கதியான பாலாஸ்தீனிய குடும்பங்கள ஹஜ் செய்திட வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இந்த ஆண்டும் சவுதி மன்னர் சல்மான் அவர்களின் சார்பாக ஹஜ் செய்திட 1000 எகிப்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களின் தாய் நாட்டிற்காக உயிர்துறந்த ராணுவம் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினர் ஆவர். முஸ்லீம்கள் என்ற ரீதியில் இந்த வாய்ப்பு வரவேற்கத் தகுந்ததே என்றாலும் சொல்லப்பட்டுள்ள காரணம் சற்று நெருடலாகவுள்ளது.

அதேவேளை எகிப்திய ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் பெரும்பாலோர் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப்போக்கும், மேற்கத்திய கலாச்சார மோகமும் கொண்ட ஆளும் எகிப்திய ராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் முஸ்லீம்களை கொன்று குவிக்கக்கூடியவர்கள் என்ற கருத்தும் பலமாக நிலவுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்