அதிரை நியூஸ்: ஜன.02
துபை, அல் கிஸஸ் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் 'வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால்' (Vinakatar Amana Motabato Lal) என்ற இந்தியர். இவர் தனது பணியின் போது ஒரு பையை கண்டெடுக்கின்றார். அதை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி ஏனெனில் அதனுள்ளே தங்க வைர நகைகள் மின்னிக் கொண்டிருந்தன.
பையை மூடியவர் சலனங்களுக்கு ஆட்படாமல் உடனடியாக அல் கிஸஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனுள்ளே இருந்தது சுமார் 2 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள தங்க வைர நகைள்.
இந்தியத் தொழிலாளியின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக, அல் கிஸஸ் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் யூசுப் அல் அதிதி அவர்கள் வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லாலை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கி கவுரவித்தார்.
துப்புரவு பணியாளராக இருந்தும் பேராசை கொள்ளாத மனிதனாக நடந்து கொண்ட அந்த சொற்ப வருமான தொழிலாளி வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால் அவர்களை சக இந்தியராக நாமும் மனமுவந்து பாராட்டுகின்றோம். நேர்மையாளனுக்கு சோதனைகள் அதிகம் ஆனால் இறுதியில் அவன் தான் ஜெயிப்பான்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்