.

Pages

Thursday, April 11, 2019

தேர்தல் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சை இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று (11.04.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை இரயில் நிலையத்தில் தேர்தல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கரவாகனங்களிலும் மற்றும் நடைப்பேரணியாகவும் 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, மாற்றுத்திறனாளியின் வாக்கு முதல் வாக்கு ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையை செய்திட வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் உடனிருந்தார்.

அதிராம்பட்டினம் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.11
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் 'ரஹ்மானியா ஆலிம்' பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, மவ்லவி எல்.எம்.எஸ் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கே.டி. முஹம்மது குட்டி ஆலிம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள்
எஸ்.ஜெ ஆதில் பாஷா, டி.ஆசாத் அலி, இ.சமீர், எம்.முகமது சமீர், டி.எம் அபுதாஹிர், கே. முகமது ஜுனைத், டி.பி இர்பாத் கான், வி.ஐ ஆசிப்கான்,பி.கே யாசிர், கே. முகமது ஃபஜ்லூர் ரஹ்மான் ஆகிய 10 பேருக்கு 'மவ்லவி ~ ஆலிம் ரஹ்மானி' பட்டங்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வேலூர் அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது ஷப்பீர் அலி கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.  ஜமாத்துல் உலமா சபை தமிழ் மாநிலத் தலைவர் மவ்லவி பி.ஏ காஜா முயீனுத்தீன்  கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்

சென்னை மண்ணடி மாமூர் பள்ளிவாசல் இமாம் மவ்லவி கே.ஏ அப்துல் ரஹ்மான், அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் மவ்லவி கே.டி முகமது ஜாபிர், மவ்லவி எம்.எஸ் தாஜுதீன், மவ்லவி தேங்கை சரபுதீன், மவ்லவி எம். மவ்லவி எம். முகமது மீரான், கே.டி முகமது ஜாபிர், மவ்லவி. எப். முகமது ஷாஃபி, மவ்லவி. கே.டி முகமது ஜுபைர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா வரவேற்றுப் பேசினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: ஏப்.11
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த கச்சா கடை மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம். சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹும் முகமது முகைதீன், அபுல் ஹசன், அப்துல் ரெஜாக், தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் நவாஸ் அவர்களின் மாமியாரும், அல் அமீன், சமீர்கான், நவீத் அகமது, ஆகியோரின் பாட்டியரும், நவ்ரஸ் எஸ். பகுருதீன், ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (12-04-2019) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, April 2, 2019

அதிரையில் திருடு போன நகைகள் மீட்பு: போலீசாருக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.02
அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் என்.சிபஹத்துல்லா (வயது 63). அதே பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போன நகைகளை மீட்டு நகைக் கடை உரிமையாளர் என். சிபஹத்துல்லாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, நகைகளை மீட்பதற்கு துரிதமாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நகை வியாபாரிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத்தார்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்,  வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 
 

அதிரையில் புதிய உதயம் 'சப்ரினா கிரனைட்ஸ் & டைல்ஸ்' (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். அகமது சிராஜுதீன். சமூக ஆர்வலரான இவர் அதிராம்பட்டினம் மெயின் ரோடு பழஞ்செட்டித்தெரு பஸ் நிறுத்தம் அருகில் 'சப்ரினா கிரனைட்ஸ் & டைல்ஸ்' என்ற தொழில் நிறுவனத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம். அகமது சிராஜுதீன் கூறியது;
வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட  புதிதாக கட்டும் அனைத்து கட்டுமானங்களுக்கு தேவையான அதிநவீன டிசைன்களில் கிரானைட்ஸ், டைல்ஸ், சானிட்டரிவேர்ஸ், ஆஸ்ப்ரோ சிமென்ட் ஷீட், கடப்பா கல், மார்பிள்ஸ் போன்ற பொருட்கள் தரமான மற்றும் மலிவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
7200802391 / 8220619217









 

அதிரையின் பிரபல மாம்பழ வியாபாரி ஊசியப்பா!

அதிரை நியூஸ்: ஏப்.02
அதிரையில் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழ விற்பனைக்கு புகழ்பெற்றவர் "ஊசியப்பா" என்கிற அப்துல் மஜீது. குடும்பப் பாரம்பரியமாக இவர் மாம்பழம், தேங்காய், புளி, பலா, வாழை போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார், இப்படியான பழ மரங்களை குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து விற்பது இவரது தந்தை முஹமது ஸாலிஹூ அவர்களிடமிருந்தே இவர் கற்றுக் கொண்டார் என்பதுடன் தந்தையின் "ஊசியப்பா" என்ற பட்டப்பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது.

தற்போது பிலால் நகரில் (செடியன் குளம் பெரிய கரை அருகில்) சீசனுக்கு ஏற்றார்போல் கிடைக்கும் பழங்களான எலுமிச்சை, பலா, வாழை, தேங்காய், தர்பூஸ் போன்றவற்றுடன் சில வகை காய்கறிகளையும் விற்று வருகின்றார். விரைவில் நல்ல மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் இவற்றை வழமைபோல் இயற்கையான முறையிலேயே பழுக்க வைத்து விற்பேன் எனவும் தெரிவித்தார், இவருடைய மாம்பழங்களுக்கு அதிரை முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளதுடன் இவரை தேடிவந்தும் வாங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜா புயலால் நமது சுற்று மாவட்டங்களில் அனைத்துவகை மரங்களும் பெருமளவில் அழிந்து போயுள்ள நிலையிலும் எலுமிச்சை, பலா, தேங்காய் போன்றவற்றை சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவிப்பு ~ அப்துல் மாலிக் (வயது 57)

அதிரை நியூஸ்: ஏப்.02
அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மி.அ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம் பப்பரிசி அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும்,  மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், அப்துல் முத்தலிப், அப்துல் முனாப் ஆகியோரின் சகோதரரும், முகமது இத்ரீஸ், அப்துல் மாஜித் ஆகியோரின் தகப்பனாரும்,  கமால் பாட்சா, சேக் அப்துல் காதர், சேக்தாவூது ஆகியோரின் மாமனாருமாகிய எலிப்பல் அப்துல் மாலிக் (வயது 57) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (02-04-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு  மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, April 1, 2019

கல்லூரிப் பேராசிரியருக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் -31.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில்  முதுகலை மற்றும் ஆய்வு விலங்கியல் துறை சார்பில் பணி ஓய்வு பெரும், கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பொ. குமாரசாமிக்கு பாராட்டு விழா விலங்கியல் துறை கருத்தரங்கத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் பணி ஓய்வு பெற்ற விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பொ. குமாரசாமிக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். பேராசிரியர் ஏ. அம்சத்  வரவேற்றுப் பேசினார். 

கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், எம். நாசர், கல்லூரிப் பேராசிரியர் எஸ்.பி. கணபதி, மக்கள் தொடர்பு அதிகாரி எஸ். ரவீந்திரன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் சி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

மேலும், கல்லூரி விலங்கியல் துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஏ.புகழேந்தி, ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளித்  தாளாளர் என்.உதயகுமார், நெடுங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. கார்த்திகேயன், விராலி மலை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை என். ஷைலா, சரபோஜி கல்லூரிப் பேராசிரியர் சுகுமாரன், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரிப் பேராசிரியை  கவிதா, புதுக்கோட்டை அரசு பெண்கள் கல்லூரிப் பேராசிரியர் எம். சசிப்பிரியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினர்.

முடிவில் பேராசிரியர் எம். முத்துகுமாரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.