2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்பு [ B.E. / B.Tech. ] சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியற் கல்லூரிகளில் 01.4.2013 முதல் 15.4.2013 முடிய பயிலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.
1. அரசினர் பொறியியற் கல்லூரி - கோயம்புத்தூர் 641 013
2. அரசினர் பொறியியற் கல்லூரி - சேலம் 636 011
3. அரசினர் பொறியியற் கல்லூரி - திருநெல்வேலி 627 007
4. அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி - காரைக்குடி 630 004
5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி - வேலூர் 632 002
6. அரசினர் பொறியியற் கல்லூரி - பர்கூர் 635 104
7. பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி - கோயம்புத்தூர் 641 004
8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - கோயம்புத்தூர் 641 014
9. தியாகராஜர் பொறியியற் கல்லூரி - மதுரை 625 015
10. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் - சென்னை 600 025
விண்ணப்ப படிவங்களை நேரடியாகவும் / அஞ்சல் மூலமாகவும் பெற விரும்புவோர், பிற இனத்தவர் ரூ.300/-ம் மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் / பழங்குடி [ ST/SC/STA ] இனத்தவர் ரூ.150/-க்குமான கேட்பு
வரைவோலையினை [ Demand Draft ] The Secretary, Part time B.E. / B.Tech. Admissions,Coimbatore" என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில் [ Payable at Coimbatore ] எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விண்ணப்பம் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவர்கள் கேட்பு வரைவோலையுடன், சான்றிடப்பட்ட [ Attested ] தங்களது சாதிச்சான்றின் நகலினை [ Xerox copy ] இணைக்க வேண்டும்.
அஞ்சல் மூலமாக பெற விரும்புவோர், கேட்பு வரைவவோலையுடன் சுய விலாசமிட்ட 35 செ.மீ X 25 செ.மீ அஞ்சல் உறையில் ரூ.50/-க்கு அஞ்சல் வில்லை ஒட்டி “The Secretary, Part time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology Coimbatore” என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு மே 2013-ல் அழைக்கப்படுவார்கள். இதற்கான அழைப்பு உரியவர்கட்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Part-time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology, Coimbatore 641014” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.4.2013