.

Pages

Thursday, May 26, 2016

தேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் !

சுத்தமான தேன் மருத்துவகுணம் வாய்ந்தது. சூப்பர் மார்க்கெட் முதல் காதி கிராப்ட் கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. தரமான தேன் என்றால் நல்ல விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.

சரி விசயத்திற்கு வரும்வோம்...
அதிரையை சேர்ந்தவர் அன்வர். இவரது மகன் சேக். அமெரிக்காவில் பணியாற்றி விட்டு உள்ளூரில் தங்கிருந்து சுய தொழில் தொடங்க முடிவெடுத்தவர் நேராக மதுரை சென்று அங்குள்ள தேனீ வளர்ப்பு பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஊர் திரும்பியவர் சொந்தமாக தேனீ வளர்ப்பில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக தென்னந்தோப்புகளில் தேன் கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து அதிரை வரலாற்றில் முதன் முறையாக தேன் வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் சேக் நம்மிடம் கூறுகையில்...
தேனீ வளர்ப்புக்காக மதுரை சென்று அங்கு சிறப்பு பயிற்சி பெற்றேன். பின்னர் ஊர் திரும்பியவுடன் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். மக்களுக்கு நியாயமான விலையில் சுத்தமான தேனை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதில் ஈடுபட்டு வருகிறேன். தென்னை தோப்புகளில் பெட்டிகள் மூலம் தேனீக்கள் வளர்க்கப்படுகிறது.

சுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணமுடையது. குறிப்பாக குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தேன் தேவைப்படுவோர் முன்பதிவு பதிவு செய்வது அவசியம். இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தேன் முன்பதிவு தொடர்புக்கு:
9994068870
 

Wednesday, May 25, 2016

மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இன்று மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது: 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 42 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி எழுதினார்கள். 33 ஆயிரத்து 426 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 95.39 ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம், காந்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த எம்.அபிராமி என்ற மாணவி  500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மாவட்ட அளவில் 500க்கு 497 மதிப்பெண் பெற்ற 5 மாணவ மாணவியர்களான பட்டுக்கோட்டை செயிண்ட் இசபெல்ஸ் பள்ளியைச் சேர்ந்த எஸ்.காயத்ரி, எம்.எஸ்.மனுஸ்ரி ரேக்ஸனா, சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேனிலைப்பள்ளி மாணவன் எம்.முகிஸ்தான், பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக் மேனிலைப்பள்ளி எம்.வி.நந்தினி, தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வி.ஸ்ருதி ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.

மேலும், தஞ்சாவ10ர் தூய இருதய பெண்கள் மேனிலைப்பள்ளி எம்.லெட்சுமி, ஆக்ஸீயம் மேனிலைப்பள்ளி ஆர்.லிசாராகவி, கும்பகோணம் ஸ்ரீமாதா மெட்ரிக் மேனிலைப்பள்ளி கே.வி.பிரபாவதி,  பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மேனிலைப்பள்ளி ஜெ.சபானாமேத்தா, திருவையாறு அமல்ராஜ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி டி.சண்முகபிரியா, தஞ்சாவூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஸ்ரீராம் பரத்வாஜ் ஆகியோர் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.

இம்மாணவ மாணவியர்கள் அனைவரையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் அவர்கள் சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மதிவாணன் (பட்டுக்கோட்டை), கேசவன் (தஞ்சாவூர்), அண்ணாபிள்ளை (கும்பகோணம்) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் குமரகுருபரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நெடுஞ்செழியன், ராமலிங்கம், செஞ்சிலுவை சங்க செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

SSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சாதனையாளர்கள் ! ( முழு விவரங்கள் )

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினார்கள்.

இதில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள்:
முதல் இடம் ( இருவர் )
ஆஃப்ரின் ஃபாரிஸா
த/பெ : அன்வர்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

அஸ்மா
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

இரண்டாம் இடம்
அஹமது தஸ்லீம் 
த/பெ: ஜாஃபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 483 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

மூன்றாம் இடம் 
கதீஜா
த/பெ: ஜவஹர் அலி
பெற்ற மதிப்பெண்கள்: 482 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

நான்காம் இடம் 
அஹமது சுஹைல்
த/பெ: முஹம்மது சலீம்
பெற்ற மதிப்பெண்கள்: 481 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

SSLC தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 39 மாணவ கள் தேர்வு எழுதினார்கள். இதில் பள்ளி 100  சதவீத தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. 5 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : M. வைஷ்னவி 
த/பெ : முருகன்
பெற்ற மதிப்பெண்கள் :  483/ 500
இரண்டாம் இடம்:
பெயர்: M. வீரமனிகண்டன்
த/பெ : மதிவானன்

பெற்ற மதிப்பெண்கள்:  477/500
மூன்றாம் இடம்:
பெயர்: லெட்சுமிபிரபா
த/பெ : பாலுசாமி

பெற்ற மதிப்பெண்கள்:  476/500

வீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்திய இரட்டைச் சகோதரர்கள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முஹம்மது சலீம் அவர்களின் மகன்கள் சுஹைல் அஹமது பள்ளியளவில் 481/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், அதே போல் மற்றொரு மகன் முஹம்மத் சஹ்ல் 477/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இருவரும் உடன் பிறந்த இரட்டை சகோதரர்கள்.

தனது மகன்கள் வெற்றி குறித்து 3 M நிறுவன உரிமையாளர் முஹம்மது சலீம் நம்மிடம் கூறுகையில்...
அல்ஹம்துலில்லாஹ் என மகன்கள் இமாம் ஷாபி பள்ளியில் பயின்று இந்த அளவுக்கு மார்க்குகள் பெற்று இருப்பதற்கு முதலில் வல்லா ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அடுத்து, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மற்றும் உடன் பயின்ற அவர்களுடைய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே ஒரு சில விஷயங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என பிள்ளைகள் இந்த அளவுக்கு மார்க் பெற முக்கிய காரணங்களில் சில:
1.      தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.

2.      என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)

3.      எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.

4.  குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

5.      இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.

6.      நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை  நாங்களும் கண்காணித்து வந்தோம்.

7.      எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.

மேற்கண்ட காரணங்களால் எனது மகன்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். என்றார்.
சுஹைல் அஹமது 481/500 மதிப்பெண்கள் 
   முஹம்மத் சஹ்ல் 477/500 மதிப்பெண்கள்

SSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 85 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 96 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர்: அஹமது தஸ்லீம் 
த/பெ: ஜாஃபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 483 /500

இரண்டாம் இடம் :
பெயர்: கதீஜா
த/பெ: ஜவஹர் அலி
பெற்ற மதிப்பெண்கள்: 482 /500

மூன்றாம் இடம் :
பெயர்: அஹமது சுஹைல்
த/பெ: முஹம்மது சலீம்
பெற்ற மதிப்பெண்கள்: 481 /500

SSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 143 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 98  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் : ( இருவர் )
பெயர் : ஆஃப்ரின் பாரிசா
த/பெ : அன்வர்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500

பெயர் : அஸ்மா
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500

இரண்டாம் இடம்:
பெயர்: ஆஷிகா
த/பெ : சேக்காதியார்
பெற்ற மதிப்பெண்கள்: 478 /500

மூன்றாம் இடம்:
பெயர்: பெமினா
த/பெ: ஜியாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள்: 472 / 500

SSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி ! ( முழு விவரங்கள் )

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 102 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் பள்ளி 100  சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாவது முறையாக சாதனை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :

பெயர் : சுரேகா
த/பெ : கருப்பையன்
பெற்ற மதிப்பெண்கள் : 474 / 500

 இரண்டாம் இடம் : ( மூன்று பேர் )

பெயர் : சினேகா
த/பெ : பாலசுப்பிரமணியன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500


பெயர் : சுபாஸ்ரீ
த/பெ : சரவணன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500

பெயர் : விஜிஷா
த/பெ : நாகராஜன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500



மூன்றாம் இடம் : ( இருவர் )
பெயர்: மோனிகா
த/பெ : குணசேகரன்
பெற்ற மதிப்பெண்கள் : 462 / 500

பெயர்: அஜீதா 
த/பெ : பாலசுந்தரம்
பெற்ற மதிப்பெண்கள் : 462 / 500