.

Pages

Saturday, October 29, 2016

பக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: நரம்பியல் நிபுணர் கருத்து!

பக்கவாதத்துக்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று நரம்பியல் நிபுணர் அ.வேணி தெரிவித்தார்.

உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்பதே நிகழாண்டு பக்கவாத தினத்தின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாத பாதிப்பு குறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியரும் நரம்பியல் நிபுணருமான வேணி கூறியதாவது:

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும்போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடி யாக நரம்பியல் நிபுணரின் ஆலோச னையைப் பெறுவது அவசியம்.

இந்த அறிகுறிகளை அலட்சி யப்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 48 லட்சம் பேர் பக்க வாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். 15 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 88 சதவீதம் பேர் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்துக்கு ஆளாகின்றனர்.

காரணங்கள் என்ன?
பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப் பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும்போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சிகிச்சைக்குப் பிறகு
பக்கவாத சிகிச்சைக்குப் பிறகு, மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தி இந்து தமிழ்

அஜ்மான் கடற்கரை கண்காணிப்பில் அதிநவீன குட்டி விமானங்கள் !

அதிரை நியூஸ்: துபாய், அக்-29
இது குட்டி விமானங்கள் (Drones) விஸ்வரூபம் எடுத்து வரும் காலம். ராணுவரீதியில் தயாரிக்கப்பட்ட இத்தகைய குட்டி விமானங்களை கொண்டு அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் மக்களை குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தி வரும் நிலையில் பல நாடுகள் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் இந்த குட்டி விமானங்களின் வடிவம் தான் வேறுபடும்.

அஜ்மான் நகர கடற்கரையில் ஆபத்திலுள்ளோருக்கு உதவும் வகையில் அதிநவீன தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட குட்டி விமானங்கள் தற்போது பரீட்ச்சார்த்தரீதியாக அஜ்மான் கடற்பரப்பை ரோந்து சுற்றி வருகின்ற நிலையில் இதுவரை வரை இந்த குட்டி விமானத்தின் துணையால் 13 சம்பவங்கள் கண்டறியப்பட்டள்ளன. பெரும் ஆபத்திலிருந்த இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இந்த குட்டி விமானத்தின் சிறப்பம்சங்கள்:
1. 4 வட்டவடிவ மிதவைகளையுடையது.
2. அதிநவீன கேமிரா பொருத்தப்பட்டது.
3. கடல் காற்றை சமாளித்து பறக்கக்கூடியது.
4. பொருட்களை 38 மடங்கு பெரிதாக்கி காட்டக்கூடியது.
5. கடற்பரப்பின் மேல் ஆபத்தில் தத்தளிப்போரை சென்சார் உதவியுடன் கண்டறியக்கூடியது.
6. ஹேக்கர்களால் முடக்க முடியாதவகையில் ரகசிய குறியீடுகளை கொண்டது.

விரைவில், இந்த குட்டி விமானங்கள் அமீரகம் முழுவதும் கடறற்கரை பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஜ்மான் நகர சிவில் பாதுகாப்பு துறையின் மீடியா இயக்குனர் கோலனல் நாஸர் ரஷீத் அல் ஜிர்ரி அவர்கள் தெரிவித்தார்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

புனித கஃபாவை நோக்கி ஏவுகணை வீசிய ஹவுத்தி ஷியா பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, அக்-29
வெள்ளியன்று நள்ளிரவு ஷியா ஹவுத்தி தீவிரவாதிகள் புனித கஃபத்துல்லாவை நோக்கி ஏவிய வல்கனோ-1 ரக ஏவுகணையை சவுதி ராணுவம் புனித மக்காவிற்கு சுமார் 65 கி.மீ.க்கு முன்பாக வானில் எதிர்கொண்டு அழித்தொழித்தது.

இஸ்லாமியப் எதிர்ப்பாளர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகோர்த்து செயல்படும் ஈரானிய ஷியா அரசாங்கம் ஏமன் நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மையை பயன்படுத்திக் கொண்டு ஏமன் வாழ் ஷியாக்களான ஹவுத்தி தீவிரவாதிகளை களமிறக்கி ஏமனை கைப்பற்றியது.

ஹவுத்திகளின் ஏமன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து சவுதி அரேபியா தலைமையில் களமிறங்கிய அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் ஹவுத்தி ஷியாக்களை ஓட ஒட விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற அமீரக நிவாரண கப்பலை தாக்கியும், அமெரிக்காவின் ஒரு போர்க்கப்பலை தாக்கியும் உலகின் கடும் கண்டனங்களுக்கு உள்ளான ஹவுத்தி ஷியா தீவிரவாதிகள் தற்போது உலக முஸ்லீம்களின் புனிதத்தலமான புனித மக்கா நகரை தாக்கத் துணிந்துள்ளனர். உலகின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஜெட்டா விமான நிலையத்தை நோக்கியே ஏவுகணை வீசியதாக திசை திருப்பும் செயலிலும் இறங்கியுள்ளனர்.

ஹவுத்தி ஷியா பயங்கரவாதிகளின் இந்த கோழை செயலுக்காக உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் அமீரகமும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இப்பயங்கரவாதிகளை முறியடிக்க முஸ்லீம் நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி -2016

அதிராம்பட்டினம், அக்-29
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 12, 13 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாநில அளவில் உள்ள பள்ளி / மதரஸா மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் 30 ஜூஸ்வு மனன திறனாய்வு போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டி விதிமுறைகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்து தகவல்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது:
 
 
 
குறிப்பு :
1.  இப் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யக் கடைசி தினம் 05-11-2016 என  நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.                                                    
                     
2.  இத்தோடு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தையே தேவைக்கேற்ப நகல் எடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

அதிரையில் தீபாவளி பண்டிகை உற்சாகக்கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், அக்-29
தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்கள், தீய செயல்கள் அழிந்து வாழ்க்கையில் ஒளி பிறக்கும் நாளாக தீபாவளி கருதப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு, கரையூர் தெரு, காந்திநகர், முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி மக்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியடைந்தனர். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

Friday, October 28, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-28
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்லராஜா தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஃப்ஐ ஆதரவு:
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில செயலர் நாச்சிகுளம் தாஜுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதில் மஜக மாநில துணைச்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உட்பட மஜகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வரப்பெற்ற புகாரினை தொடர்ந்து  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நேற்று இரவு 10 மணியளவில் (27.10.2016)  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை, நாகர்கோவில் போன்ற இடங்களில் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேருந்துகளில் ஒவ்வொரு பயணிகளிடம் பயணச்சீட்டு சரி பார்த்து பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.  பின்னர் காந்திஜி சாலையில் உள்ள தனியார் பேருந் பார்சல் பதிவு செய்யும் மையத்திற்கும், டிக்கெட் முன் பதிவு செய்யும் பதிவேடுகளையும் சோதனை நடத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்ற கிளை மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இன்று முதல் வருகின்ற 31.10.2016 வரை தீவிரமாக தனியார் ஆம்னி பேருந்துகள் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெ.மகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்; விஜயகுமார், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஹரிதாஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

துபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு !

துபாய் : துபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் அப்துல் மாலிக் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வர்த்தக பிரமுகர் அல் வகா குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் புதுக்கோட்டை சர்புதீன் தலைமை வகித்தார்.

பேராசிரியர் அப்துல் மாலிக் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள புதுக்கோட்டை சர்புதீன் அவர்களின் பணிகளை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர்.காம் இணையதள ஆசிரியர் முதுவை ஹிதாயத், செங்கோட்டை ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.