அதிரை நியூஸ்: ஏப்-29
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் 22.04.2017 சனிக்கிழமை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள அல் அப்ரா கிளினிக்கில் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் நஜிமா நசீர் தலைமையில் குழுவினர் இந்த இலவச பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் சர்புதீன் உள்ளிட்டோர் மருத்துவ முகாமுக்கு வருபவர்களை பதிவு செய்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர்.