.

Pages

Friday, March 30, 2018

அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் குலுக்கல் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் உலக தரத்தில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் 3 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு, 30 சிறப்பு பரிசுகள், 25  ஆறுதல் பரிசுகள் அடங்கிய மெகா பரிசு குலுக்கல் போட்டியை அறிவித்து இருந்தது. இதில், ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.500 க்கு உணவருந்திய வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. இதன் குலுக்கல் விழா இன்று (30-03-2018 ) வெள்ளிக்கிழமை மாலை ரிச்வே கார்டன் - கதீஜா மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முகமது அலி ஏற்பாட்டின் பேரில்,  சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு, மெகா குழுக்களை தொடங்கி வைத்து வழி நடத்தினார். விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளில் இருவர் விழா மேடைக்கு அழைத்து பயனாளிகள் தேர்வு நடத்தப்பட்டது.

முதல் பரிசு: ஒருவருக்கு 8 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசு: ( இருவருக்கு) தலா 4 கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு: ( 4 பேருக்கு) தலா 2 கிராம் தங்க நாணயம்
நான்காம் பரிசு: ( 8 பேருக்கு) தலா 1 கிராம் தங்க நாணயம்
ஐந்தாம் பரிசு: ( 15 பேருக்கு) தலா 20 கிராம் வெள்ளி நாணயம்
ஆறுதல் பரிசு : ( 25 பேருக்கு) ரூ.500 மதிப்புள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கிப்ட் வவுச்சர்

ஆகிய பரிசுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை ஏப்ரலில் முறைப்படி தொடக்கம்!

பட்டுக்கோட்டை, மார்ச் 30   
சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே அமைக்கப்பட்ட  புதிய அகலப் பாதையில் இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.எனவே, கிடப்பில் போடப்பட்ட  அடிப்படை வசதி தொடர்புடைய பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி- திருத்துறைப்பூண்டி இடையிலான  ( தெற்கு ரயில்வேயின் கடைசி ) மீட்டர் கேஜ் ரயில்பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
 
இப்பாதையில் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி கடைசி ரயில் இயக்கப்பட்டது.  அதன் பின்னர் பட்டுக்கோட்டை திருவாரூர் பயணிகள் ரயில் 2013-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் பலவேறு பிரச்னைகளால் மிகவும் சுணக்கமாக நடைபெற்று வந்தன.இந்நிலையில்,  பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான 72 கி.மீ. தொலைவுக்கு மட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் இப்பகுதியில் பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்னர் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான போக்குவரத்து தொடங்கும் என  ரயில்வே அறிவித்து தொடர்புடைய  கால அட்டவணையும் வெளியிட்டது.

இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், அடுத்து ஏப்ரல் 6, 7 அல்லது 13, 14 தேதிகளில் முறைப்படி போக்குவரத்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரு நாள் போக்குவரத்தும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படுவதாக ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த மார்க்கத்தில், மொத்தம் 36 ரயில்வே கேட்டுகளும், 14 பெரிய பாலங்கள் மற்றும் 262 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ரயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்கள் (கேட் கீப்பர்கள்) இது வரை நியமிக்கப்படவில்லை. 

எனவே தாற்காலிகமாக மாற்றுப் பணியாளர்களைக் (மொபைல் கேட் கீப்பர்களை)  கொண்டு ரயில் கேட்டுகளை மூடி, திறந்து ரயில்கள் இயக்கப்படும் என கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உத்தரவிட்டுள்ளார்.இதற்கென இரு பணியாளர்கள் அந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

சென்னை, புதுச்சேரி ரயில்கள் இணைப்பு:
வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, பட்டுக்கோட்டையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு சென்றடையும். இதன் மூலம் காரைக்குடியிலிருந்து (8.35-க்கு) வரும்  ராமேசுவரத்திலிருந்து வரும் விரைவு ரயில் மூலம்  சென்னை செல்ல முடியும். மேலும் வெள்ளிக்கிழமை மட்டும் இயங்கும் வாரந்திர  (கன்னியாகுமரி-  புதுச்சேரி) ரயிலையும் பிடிக்க முடியும்.

அதேபோல எதிர் மார்க்கத்தில்,காரைக்குடியில் காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் பட்டுக்கோட்டைக்கு 1 மணிக்கு சென்றடையும். இதில், காலை 9.35-க்கு விருதுநகரிலிருந்து காரைக்குடி வந்து சேரும் தென்மாவட்டப் பயணிகள் ரயலில் வருவோர் 10 மணிக்கு புறப்படும் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் மூலம் அப்பகுதியை அடைய வாய்ப்பாக உள்ளது.

விருதுநகர் ரயிலை பிடிக்க முடியாது:
ஆனால் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் ரயிலில் செல்லும் பயணிகள் அங்கிருந்து விருதுநகர் செல்லும் பயணிகள் ரயிலை பிடிக்க முடியாது. காரணம் அந்த ரயிலும் அதே நேரத்தில் (மாலை 6 மணி) புறப்படுவதால் பிடிக்க முடியாது.

எனவே இந்த நேர அட்டவணையில் ஏதாவது ஒன்றை மாற்றி அமைத்தால் தென்மாவட்ட பயணிகளும் பயன் பெற முடியும் என பயணிகள் தெரிவித்துள்னர்.

கழிவறை, ஓய்வறை பணிகள் கிடப்பில்:
பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான சிறு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் ஓய்வறை வசதிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதனால் பயணிகள்  அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறைகளில் வடிகால் மற்றும் தண்ணீர் வசதிகள், நடைமேடைகளில் இருக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ரயில் போக்குவரத்து தொடங்கும் முன் கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்!

அதிரை நியூஸ்: மார்ச் 30
குவைத்தில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு காலத்திற்கான வேலைவாய்ப்பு விசாக்கள் அறிமுகம்!

குவைத்திற்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிதாக வருபவர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு மாறிச் செல்பவர்களுக்கு (Issuing temporary work permits for 100 days for those who change jobs or those under probation after entering the country for the first time) முதலில் 100 நாட்களுக்கான கண்காணிப்பு கால (Probation Period) (தற்காலிக) விசாக்களை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத்திற்கான பொது ஆணையம் (Public Authority for Manpower) தெரிவித்துள்ளது.

தொழிலாளர் ஆய்வுத்துறை (Labor inspection department) இத்தகைய தற்காலிக விசாக்களை வழங்கும் என்றாலும் இதை விரைவில் ஆன்லைன் மயப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தற்காலிக 100 நாள் விசாக்கள் 'எகைலா'விலுள்ள மத்திய அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. (These permits are currently being issued only by the central department in Egaila)

Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்

துபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்படும் என அறிவிப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 30
5G நெட்வொர்க் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எதிஸலாத் சேவையில் தடங்கள் ஏற்படும் என அறிவிப்பு

அமீரக அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான எதிஸலாத் நிறுவனம் மேம்பாட்டு பணிகளை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதன் சேவைகளில் குறைபாடுகள் காணப்படும் என்றும் இதற்காக முன்கூட்டியே வருத்தம் தெரிவிப்பதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

எதிஸலாத்தின் இந்த தொலைத்தொடர்பு சேவைகள் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்றப்பின் 5G data coverage and Internet of Things (IoT), among others (மற்றும் இதர சேவைகளின்) தரம் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது (Such services will enhance the quality of the mobile data experience for Etisalat's customers). இந்த மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காலத்திலும் தொடர்ந்து சேவைகள் இயங்கும் என்றாலும் சிலவேளை அவற்றில் குறைபாடுகள் ஏற்படலாம் எனவும் விளக்கமளித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Thursday, March 29, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து CFI ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 29
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹவாஜா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ரியாஸ் அகமது கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'தமிழக விளை நிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள் விரும்பாத மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்றார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் நிஜாமுதீன் கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்துவதற்கு அவசரம் கட்டிய மத்திய அரசு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காட்டவில்லை' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். முடிவில், அவ்வமைப்பின், மாவட்ட பொருளாளர் ரஜாக் நன்றி கூறினார்.
 

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் (DEMU) கால அட்டவணை !

பட்டுக்கோட்டை, மார்ச் 29
பட்டுக்கோட்டை - காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது.

இந்நிலையில், காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை நாளை (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ளது.

காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, 
கண்டனூர் புதுவயல் (10.12 - 10.13),
பெரியக்கோட்டை (10.25 - 10.26),
வளரமாணிக்கம் (10.38-10.39),
அறந்தாங்கி (11.03 - 11.05),
ஆயங்குடி (11.18 - 11.19),
பேராவூரணி (11.45 - 11.47),
ஒட்டாங்காடு (12.13 - 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.

அதேபோல், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (15.35 - 15.36)
பேராவூரணி (16.00 - 16.02),
ஆயங்குடி (16.30 - 16.31),
அறந்தாங்கி (16.45 - 16.47),
வளரமாணிக்கம் (17.14 - 17.15),
பெரியக்கோட்டை (17.26 - 17.27),
கண்டனூர் புதுவயல் (17.37 - 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.

- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)

குவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ஒப்புதல்!

அதிரை நியூஸ்: மார்ச் 29
குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தது என்றாலும் சட்டம் இதுவரை இறுதிவடிவம் பெறவில்லை.

குவைத் மத்திய வங்கி இத்தகைய வரிவிதிப்புக்கள் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களையே ஊக்குவிக்கும் என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சலெஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்தது.

இந்தக்குழு குவைத் மத்திய வங்கியின் ஆட்சேபத்தை புறந்தள்ளியதுடன் இது சட்டப்பூர்வமான வரி விதிப்புத்தான் என்றும் இதன் மூலம் வருடத்திற்கு 50 முதல் 60 மில்லியன் குவைத் தினார் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வரி விதிப்பு திட்டத்திலிருந்து குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என்றும் பணம் அனுப்புவதின் மீது 4 வகையான வரி வசூல் திட்டங்களையும் பரிந்துரை செய்துள்ளது.

Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்

கண்ணை நம்பாதே ! அது உன்னை ஏமாற்றும் !! (நிஜ படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 29
நாம் வாழும் காலம் விஞ்ஞானம் மிகவும் முன்னேறிய காலம் என்றாலும் இன்னும் நாம் அறியாத முன்னேற்றங்களும் வரத்தான் உள்ளன. விஞ்ஞானத்தின் துணை கொண்டு பொய்யை மெய்யாகவும், மெய்யை பொய்யாகவும் மாற்ற முடியும் என்பதற்கான மிக மிக சமீபத்திய உதாரணம் Facebook சமூக வலைத்தளமும் Cambridge Analytica என்ற நிறுவனமும் இணைந்து செய்த தகிடுதத்தங்கள்.

இந்தியாவில் கூட பல மாநிலங்களின் ஆட்சி மாற்றங்கள் நடைபெற இந்த ஊழல் நிறுவனங்கள் உதவியுள்ளன என்றால் இன்னொருபுறம் வெறும் போட்டோஷாப்பை வைத்துக் கொண்டே மத்தியில் பாஜகவால் ஆட்சியமைக்க முடிந்துள்ளதும் மிகவும் கவலையுடன் கவனிக்கத்தக்கது.

எனவே, எது போட்டோஷாப் எது நிஜம் என பிரித்தறிந்து நம்புவதே பெரும்பாடு தான். இங்கு தந்துள்ள புகைப்படங்களோ போட்டோஷாப் செய்தவை போல் தோன்றும் நிஜ படங்கள் என சொல்லியுள்ளது இதனை பிரசுரித்துள்ள இணையதளம். So, the ball is now in your court.

Source: funtof.com
தமிழில்: நம்ம ஊரான்
1. தெளிந்த நீரில் மிதக்கும் படகு
2. மிக நேர்த்தியாக வெட்டப்பட்ட மரங்கள்
3. வானை பிரதிபலிக்கும் பொலிவிய நாட்டு உப்பு சதுப்பு நிலம்
4. கட்டிடத்தின் மீது கேன்வாஸ் ஓவியத் திரை
5. நியூஸிலாந்து நாட்டில் நீல் டாவ்ஸன் என்பவர் உருவாக்கிய கண்ணாடி சிற்பம்
6. ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட பாதி அறை
7. வானில் பறப்பது போல் தோன்றும் அழுக்குநீரில் செல்லும் படகு
8. பந்து போல் நம் கண்களுக்கு தோற்றமளிக்கும் புல்தரை
9. குவாத்திமாலா நகரில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
10. நச்சுக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மரங்கள்
11. ஆஸ்திரேலியாவில் வீசிய மேக வடிவிலான மணற்புயல்
12. ஒப்பனையுடன் கருப்பு வெள்ளையில் கிருஸ்துமஸ் தாத்தா உடை
13. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு அடுக்குமாடி கார் பார்க்கிங் குறியீடு
14. போலாந்து நாட்டில் வளைந்த மரக்காடு
15. தென் கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான கப்பல் வடிவ ஹோட்டல்
16. பெலீஸ் வரினி என்ற ஓவியரின் கைவண்ணம்
17. பறக்கும் தட்டுப்போல் காட்சியளிக்கும் மேகம்
18. புத்தகங்கள் கொட்டுவது போன்ற சிற்பம்