புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனை உடனடியாகத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றார் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல்.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடன்களை மறு சீரமைப்பது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அனவாரி சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதத்தின்படி கடன் செலுத்தும் கால அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடனைத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக்கூடாது என்றார் அவர்.
கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பிரதிநிதி தியாகராஜன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் லெட்சுமி நரசிம்மன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆர். வரதராஜன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.