அதிராம்பட்டினம், மார்ச் 29
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கான முன்னோட்டமாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
அதிவேகமாக கடந்து சென்ற சிறப்பு ரயிலை கண்டு ரசிக்கவும், பிரமாண்டமாக காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தை பார்வையிடவும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் ரயில் நிலையத்தில் திரண்டு இருந்தனர். அப்போது, சரியாக காலை 10.42 மணிக்கு தண்டவாளத்தில் புழுதி பறக்க சீறி வந்த ரயிலை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். கையசைத்து வழியனுப்பி வைத்தனர். செல்பியும் எடுத்துக்கொண்டனர்.