.

Pages

Tuesday, April 23, 2019

அதிரையில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி பட்டமளிப்பு!

ஏ.எல் மெட்ரிக். பள்ளி
அதிராம்பட்டினம், ஏப். 23
அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிஎம்பி லேன் ஏஎல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கிராஅத்தை அடுத்து, தலைமை ஆசிரியை பஷீரா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில், 11 ஆலிமாக்கள், 22 இல்லத்தரசியர் பட்டம் பெற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக காமிலா (A-Z) முஹைதீன் கலந்துகொண்டு, இறைவனையும் இறைத்தூதரையும் இறைமார்க்கத்தையும் தெரிந்துகொள்வதற்கு மார்க்க அறிவு என்பது எவ்வளவு கட்டாயமானது எனும் கருவில் உள்ளத்தில் உறைப்பது போன்ற சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார்.

பட்டம் பெற்ற மணவியர், அகீதா எனும் கொள்கை விளக்கம் பற்றியும் புகழ்பெற்ற இமாம்களைப் பெற்ற அன்னையரின் தியாக வாழ்க்கை குறித்தும் ஈமான் எனும் இறைநம்பிக்கை, அறிவுக்கு ஒத்துவரவேண்டும் என்று நிபந்தனை வைப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இறுதியாக, ஸவ்தா அஹ்மது ஹாஜா, தற்கால இளம் பெண்கள்  பலரின் வாழ்க்கை சீரழிந்து போவதற்கு, மார்க்கக் கல்வி இல்லாமையே காரணம் எனும் கருத்தோடு, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, மாணவிகளை எவ்வாறெல்லாம் செம்மைப்படுத்துகிறது என்று விளக்கமாக நிறைவுரையாற்றினார். துஆவோடும் மன நிறைவோடும் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

செய்தி வெளியீடு: அதிரை தாருத் தவ்ஹீத்

Monday, April 22, 2019

அதிரை பைத்துல்மால்: கனிவான வேண்டுகோள் (வீடியோ)

அதிராம்பட்டினம், ஏப். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி, மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி, ஆண்டுதோறும் ஃபித்ரா அரிசி விநியோகம், தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட சேவைத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனாஸா (இறந்த உடல்) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும்  தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டங்கள் யாவும் வருடந்தோறும் கிடைக்கப்பெரும் ஜக்காத் நிதி உதவியைக்கொண்டும், கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி மற்றும் நன்கொடைகளைக்கொண்டு நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த  அன்புச் சகோதரர்கள் அனைவரும் கடந்த வருடங்களைப்போல் இவ்வருட புனிதமிகு ரமலான் மாதத்தில் தங்களுடைய ஜக்காத் மற்றும் பித்ரா நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு அதிகமதிகம் வழங்க வேண்டும் என அதிரை பைத்துல்மால் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுபற்றி பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் அவர்கள் வைக்கும் கனிவான வேண்டுகோள் (இணைப்பில் வீடியோ)

 

அதிராம்பட்டினத்தில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சவுக்கு மரங்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாவட்டம், கப்பலூர் சென்று கொண்டிருந்த லாரி வாகனம் இன்று திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் வேக தடுப்பு அரண் அமைந்துள்ள பகுதி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்து கொட்டிய சவுக்கு மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டதால், சாலையின் இருபுறமும் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர், மாற்று வாகனத்தில் அனைத்து மரங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, April 20, 2019

மழையில் நனைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.20
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் 15ந் தேதியை இலக்காகக்கொண்டு, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடை மேடைகள் தளம், தடுப்புச் சுவர், கழிப்பறை போன்ற கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கட்டுமானப்பகுதியின் சிமெண்ட் தளங்கள் போதுமான தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இதனால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை அதிகாலை லேசான இடியுடன் கூடிய மழை பெய்ததால், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் தூய்மையாகவும், சிமெண்ட் தூசுகளின்றி பள்ளிச்சென காட்சியளித்து வருகிறது.

மழையில் நனைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அதிகாலை வாக்கிங் பொழுதில் எடுக்கப்பட்ட ரம்மியமான படங்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 68)

அதிரை நியூஸ்: ஏப்.20
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஓடப்பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹம்மாது, மர்ஹூம் பிச்சை கனி தண்டையா ஆகியோரின் மைத்துனரும், பி. முகமது இஸ்மாயில், பி. செய்யது புஹாரி, பி. செய்யது முகமது, ஆகியோரின் தாய் மாமாவும், என்.பாருக் அலி அவர்களின் சம்பந்தியும், எஸ்.அப்துல் பாஸித் அவர்களின் தகப்பனாருமாகிய எம். சாகுல் ஹமீது (வயது 68) அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (21-04-2019) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, April 19, 2019

பட்டுக்கோட்டையில் அதிரை பிரமுகரின் புதிய உதயம் 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.இசட். பஷீர் அகமது. சமூக ஆர்வலரான இவர் பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில், (பெரிய பள்ளிவாசல் அருகில்) 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' கண் பராமரிப்பு மையத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த (ஏப்.14) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர் ராமானுஜம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பிரபல கண் மருத்துவர் டாக்டர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பிரபல கண் மருத்துவர் டாக்டர் எஸ். கோபிநாத் கண் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார். கண் மருத்துவர் எல். ஸ்ரீனிவாசன், தொழில்அதிபர் டி.முகமது நிஜாமுதீன் மற்றும் வர்த்தகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முன்னதாக நிறுவன உரிமையாளர் எம்.இசட். பஷீர் அகமது மற்றும் 'பெஸ்ட் ஆப்டிக்கல்ஸ்' கண் பராமரிப்பு மையம் எஸ். ஜெய்லானி, கோபிகா ஆகியோர் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம்.இசட். பஷீர் அகமது கூறியது;
எங்களது கண் பாதுகாப்பு மையத்தில் சிறப்பு கண் மருத்துவர் மூலம் கண் பாதுகாத்தல் குறித்து பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்படும்.  கம்ப்யூட்டர் மூலம் கண் மருத்துவ பரிசோதனை, காண்டாக்ட் லென்ஸ் பொருத்தல் போன்ற வசதி உண்டு. மேலும், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அதி நவீன உலகத் தர வாய்ந்த ரேபான், போஸ் & லாம்ப், போஸ், பூமா, ஹோயா, பாஸ்ட் ட்ராக், பிரெஸ் லுக், நைக், லெவிஸ், டாக்லி உள்ளிட்ட நிறுவனத் தயாரிப்பு கண்ணாடிகள் மலிவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
04373 254066 / / 8300025611 
9842071066 / 9442991155