.

Pages

Wednesday, August 26, 2020

அதிராம்பட்டினத்தில் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.26
சுய பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்காப்பு உத்திகளை அறிந்துகொள்ளும் வகையில், தற்காப்பு கலை (டேக்வான்டோ) பயிற்சி வகுப்பு கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ராஜகிரி டேக்வான்டோ கிளப் சீனியர் கராத்தே பயிற்சியாளர் முகமது சரீப், தற்காப்புக் கலை உத்திகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹனி சேக் செய்திருந்தார்.

இன்று (17-07-2020)  புதன்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பு இனி வாரந்தோறும் புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத்தரக்கூடிய ஒரு விளையாட்டு. உடல் ஆரோக்கியம், சுய பாதுகாப்பு ஆகியவற்றோடு, வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
ஹனி சேக் 7010425858

கண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

கண்டியூர், ஆக.24
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகள் சார்பில், 105-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜெயகார்த்திகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 71 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகளின் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்!

அதிராம்பட்டினம், ஆக.26
அன்னை தெரசா பிறந்த தினத்தை முன்னிட்டு, அரிமா சங்கத்தின் 'பசித்தோருக்கு உணவளிப்போம்' திட்டத்தின் கீழ், அன்னதானம் வழங்கும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், சங்க இயக்குநர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எம்.அப்துல் ரஹ்மான், ஏ.முகமது ஆரிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

அதிரை பைத்துல்மால் சார்பில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி!

அதிரை நியூஸ்: ஆக.26
சிறுநீரகம் பாதிப்படைந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, அதிரை பைத்துல்மால் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகள் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள நோயாளிகள் மருத்துவரின் மருத்துவ ஆவணங்களுடன் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9443863082

மரண அறிவிப்பு ~ முகமது காசிம் (வயது 86)

அதிரை நியூஸ்: ஆக.26
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முகமது  அவர்களின் மகனும், மர்ஹூம் வரிசை முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எச் முகைதீன் ஷா அவர்களின் சகோதரர் மகனும், நெய்னா முகமது, ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், ஜமால் முகமது, சேக் தாவூது ஆகியோரின் தகப்பனாரும், சேக்பரீது, தாஜுதீன் ஆகியோரின் மச்சானும், கபூர், முகமது இத்ரீஸ் ஆகியோரின் பெரிய தகப்னாரும், முகமது அக்ரம் அவர்களின் பாட்டனாருமாகிய முகமது காசிம் (வயது 86) அவர்கள் இன்று காலை புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-08-2020) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 25.08.2020 அன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குவது, கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டன. மேலும், சங்கப் பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் அவர்களின் மனைவி ஜலீலா அம்மாள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்த அப்துல் ரெஜாக் அவர்களுக்கு, அரிமா சங்க மாவட்ட ஒரியண்டேஷன் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பதவி பிரமாணம் செய்து வைத்து, கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் பி கணபதி, எம். கஜாலி முகமது, டி.பி.கே ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில், கரோனா பாதிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் ஏ.முகமது ஆரீப், ஒய்.முகமது அபூபக்கர் ஆகியோருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. நிறைவில், சங்க இயக்குநர் என்.ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, கஜாலி முகமது, அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், முல்லை ஆர்.மதி, மாணிக்க. முத்துசாமி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், ஏ.வி.எம் வரிசை முகமது உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Tuesday, August 25, 2020

மரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.25
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கே.பி.எம் அப்துல் முத்தலீஃப் அவர்களின் மகளும், அண்ணாவியார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நூ.கா.மு. நூர் முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், பசீர் அகமது, அப்துல் வாஹித், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மூத்த சகோதரர் உமர் என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், கே.பி.எம் பகுருதீன் அவர்களின் சகோதரியும், அஸ்ரப் அலி, 'நூவன்னா' நூர் முகமது, புரோஸ்கான் ஆகியோரின் தாயாருமாகிய கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-08-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, August 24, 2020

மரண அறிவிப்பு ~ எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.24
அதிராம்பட்டினம், எம்.எஸ்.எம் நகரைச் சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் சித்திக் அவர்களின் மகனும், மர்ஹூம் புதுப்பட்டினம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், அகமது ஜுனைது, செய்யது பெனாசர், செய்யது நவாசுதீன் ஆகியோரின் சகோதரரும், புதுப்பட்டினம் சீனி முகமது, அபு உபைதா ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அகமது சித்திக் அவர்களின் தகப்பனாருமாகிய எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65) அவர்கள் இன்று மாலை 7 மணியளவில் ஈசிஆர் பிஸ்மி காம்ப்ளக்ஸ் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.