.

Pages

Sunday, February 21, 2021

அதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்வி உதவித்தொகை வழங்கல்!


அதிரையைச் சார்ந்த, ஒரு ஏழை மாணவனுக்கு பொறியியல் படிப்பு படிப்பதற்கு கல்வி உதவியாக  ரூ 20,000/- (இருபதாயிரம்) நேற்று (20-02-2021) காலை 11 மணி அளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி.பேராசிரியர்.S.பர்கத், செயலாளர் ஹாஜி.S.A.அப்துல் ஹமீது மற்றும் துணைப் பொருளாளர் ஹாஜி.S.அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, February 19, 2021

அதிரை பைத்துல்மால் சார்பில்தையல் இயந்திரம் வழங்கல்!


அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் நிர்வாகி ஒருவரின் சார்பாக தையல் மெஷின் ஒன்று அதிரை பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட நமதூர் ஆதரவற்ற, கணவனை இழந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக நேற்று 17-02-2021 அன்று காலை 11 மணி அளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் ஹாஜி.S.சரபுதீன், துணைப்பொருளாளர் ஹாஜி.S.A.முகமது ஜமால், மற்றும் உறுப்பினர் ஜனாப்.S.ஃபைசல் அகமது, அதிரை பைத்துல்மால் தலைமை நிலைய நிர்வாகிகள் ஹாஜி.பேராசிரியர்.S.பர்கத், தலைவர், ஹாஜி.S.A.அப்துல் ஹமீது, செயலாளர், ஹாஜி.S.M.முகமது முகைதீன், பொருளாளர், ஹாஜி.M.Z.அப்துல் மாலிக், துணைத் தலைவர், ஹாஜி.H.முகமது இபுராஹிம், இணைச் செயலாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Wednesday, February 3, 2021

கோவிட் -19 தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!


கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார்கள்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமினை இன்று (03.02.2021) ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் கோவிட் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுää

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தேதி (03.02.2021) 24 மையங்களில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையிலும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 4700 பேருக்கு கொரோனா தடுப்பூசி; போடப்பட்டுள்ளது அதே போன்று ஒவ்வொரு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி மருத்துவத்துறை மூலமாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முதலில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு முன் உரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் அதே போன்று அடுத்த  கட்டமாக நேற்றிலிருந்து  முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி நானே போட்டுக் கொண்டேன்ää அந்தவகையில் வந்து இந்த தடுப்பூசியின் மூலம் எந்த ஒரு பக்க விளைவுää  பாதிப்பும் இல்லை யாரும் பயப்பட வேண்டாம.; அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ளலாம். தற்போது வரை நமது நாட்டில் 35 லட்சத்திற்கும்  மேற்பட்டோருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோன்று நமது மாவட்டத்தில் சுமார் 4700 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூர் முதல்வர் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் மற்றும் நானும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளேன் அரசு அறிவுரையின்படி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றிருக்கிறது இப்போது வரைக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்று அனைவருக்கும் கேட்டுக்கொள்கிறேன் 

இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.மருதுதுரை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.ராமுää துணை இயக்குனர் மரு.ரவீந்திரன். மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்



அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், பிப்.03

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-01-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.