.

Pages

Tuesday, May 2, 2017

மரண அறிவிப்பு ( ஹாஜிமா நூர்ஜஹான் அவர்கள் )

அதிரை நியூஸ்: மே-02
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் டைலர் சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் இஸ்மாயில், மர்ஹூம் கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான், முஹம்மது யாகூப், முஹம்மது கமால், முஹம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரியும், அகமது கபீர், சாகுல் ஹமீது, நாசர் ( ஈசிஆர் பெட்ரோல் பங்க் ) ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா நூர்ஜஹான் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

Monday, May 1, 2017

'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' புதிய நூல் வெளீயிடு !

புத்தக தலைப்பு, 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'
பக்கங்கள்: 164 விலை: ரூ 110/
ஆசிரியர்: டாக்டர் ஏ.பீ முகம்மது அலி, பிஎச்டி, ஐ.பீ.எஸ் ( ஓய்வு )

அடக்கம்:
1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை!
2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன !
3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக!
4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!
5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை!
6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!
7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!
8) புரையோடிருக்கும் பழக்க வழக்கங்களும் பத்திரிக்கை செய்திகளும்!
9) மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள் !
10) தொன்று தொட்ட கற்பனையும் உண்மை நிலையம் !
11) என்று தணியும் இந்த சுதந்திரத் தியாகம் !
12) ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த
       அஞ்சா நெஞ்சன் முகம்மது சாலியா!
13) முஸ்லிம்கள் வேலை வாய்ப்பின்மைக்கு யார் காரணம் !
14) சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரில்லர்!
15) என்னுடைய பெயர் கிங் கான்!
16) சாதனையும் சமுதாய வேதனையும் !
17) எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல -அமெரிக்கா பெண்மணி!
18) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் !
19) மதமாற்ற பரபரப்பு பேச்சும் பத்திரிக்கை செய்தியும் !
20) கண்டதும், கேட்டதும் !
21) முஸ்லிம்கள் முன் வைத்த மூன்று சவால்கள் !
22) எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் !
23) காகிதப் பூ மணக்காது கள்ளிப்பாலும் சுவைக்காது!
24) இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா !
25) மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா !
26) மலர்ந்தும் மலராத பாதி மலரிலேயே மடிந்த இளந்தளிரே!
27)கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா !
28) எத்தனை காலம்  தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
29) இறை இல்ல தேர்தலும், பொதுத் தேர்தலும் !
30) கொலை வெறி கோசமும், நிழல் யுத்தமும் !
31) ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் !
32) தேவையா தண்டு வடம்!
33) யாரோ, ராஜ துரோகி யாரோ !
34) தமிழகத்தை உலுக்கிய பெரு வெல்ல ஆழிப் பேரழிவு !
35) வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கலாமே !
36) மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசிகரத் தகவல்கள் !
37) உலக குடும்பவியல் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் -தலாக் !
38) பொது சிவில் சட்டம் நேற்று, இன்று, நாளை !

The book will be available at :
Salamath Book House
90,/185, Lingi Chetty Street, Mannady, Chennai-600001
Phone; 044-25211981, 42167320
email: salamathbooks@yahoo.com
Md.Iliyaas Cell: 9841632449

சவூதியில் மனைவியை இழந்து 40 நாள் குழந்தையுடன் நாடு திரும்பிய இந்தியர் !

அதிரை நியூஸ்: மே-01
செய்யாத தவறுக்கு தண்டனையாக மனைவியை மரணத்திற்கு தாரைவார்த்து விட்டு 40 நாள் கைக்குழந்தையுடன் திரும்பினார் ஹைதராபாத் இளைஞர் மஜ்ஹருத்தீன்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல்வேறு எதிர்கால சுயதொழில் கனவுகளுடன் சவுதிக்குள் காலடி எடுத்து வைத்தனர் ஹைதராபாத்தை சேர்ந்த மஜ்ஹருத்தீன் ஆமினா பானு தம்பதியினர் ஆனால் அவர்களுடைய ஸ்பான்சர் சவுதியின் 'நிதாகத்' சட்டப்படி சிவப்பு பட்டியலிடப்பட்டவர் என்பதால் அவர்களால் முறைப்படி ரெஸிடென்சி விசா அடிக்க இயலவில்லை.

எதிர்பாராத இந்த சூழ்நிலையால் தம்பதியினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்டனர். இந்நிலையில் ஆமினா பானு கர்ப்பம் தரிக்க அவர்களின் நிலை இன்னும் மோசமானது. இகாமா அடிக்க முடியாததால் அவர்களால் மருத்துவ இன்ஷூரன்ஸ் மற்றும் போதிய மருத்துவ உதவிகளையும் ஆலோசணைகளையும் பெற முடியவில்லை. மேலும், கர்ப்பிணி ஆமினா பானுவிற்கு உதவியாக யாரையும் தாயகத்திலிருந்து தருவிக்கவும் முடியவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்த மூன்றாம் நாள் ஆமினா பானு இறந்து போனார் எனினும் அவருக்கு முறையான இருப்பிட அனுமதி இல்லாததால் ஜனாஸாவை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் ரியாத் நகரிலேயே அடக்கம் செய்தார்.

மனைவி இறந்ததை தொடர்ந்து கைக்குழந்தையுடன் தவித்தவருக்கு தன் குழந்தையின் பிறப்பைக் கூட இங்குள்ள Civil Affairs அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாததால் அக்குழந்தைக்கு பாஸ்போர்ட் பிரச்சனையும் எழுந்தது என்றாலும் 90 நாள் பொதுமன்னிப்பு அறிவிக்கப்படும் முன்பே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்ஸிட் விசாவை மனிதாபிமான அடிப்படையில் கைக்குழந்தைக்கு மட்டும் வழங்கியது சவுதி பாஸ்போர்ட் துறை.

இறுதியாக, சவுதி அரசால் 90 நாட்கள் பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் எமர்ஜென்ஸி சர்ட்டிபிகேட்டை பெற்று கசப்பான நினைவுகளையும் பச்சிளம் குழந்தையையும் சுமந்தவாறு நாடு திரும்பினார் மஜ்ஹருத்தீன்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

அமெரிக்கா விசா பெற நூதன வழிபாட்டில் இறங்கும் இந்தியர்கள் !

அதிரை நியூஸ்: மே-01
உலகிலேயே அதிக மூளை திருட்டில் ஈடுபடும் நாடு என்ற பெயர் அமெரிக்காவிற்கு உண்டு, அதாவது வெளிநாட்டு அறிவாளிகளை தன்னுள் ஈர்த்துக் கொண்டு அவர்களின் திறமையை அமெரிக்காவின் திறமையாக வெளிக்காட்டும்.

அதேபோல், இந்தியாவில் நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு தங்களின் உழைப்பை தாரைவார்க்கச் செல்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததும் உண்டு ஆனால் அமெரிக்காவிற்கு செல்பவர்கள் எல்லாம் சிந்திக்கும் திறனுடையவர்கள் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமிது.

டிரம்ப் எனும் வாலண்டியர் கோமாளி அமெரிக்கா ஜனாதிபதியானது முதல் பல்வேறு துக்ளக் தர்பார் சட்டங்களை போட்டு வருகின்றார், அதில்  “H-1B” எனும் வரம்புகள் உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு விசா தடையும் ஒன்று. இதனால் உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டாலும் இந்தியர்கள் அதில் முதன்மையானவர்கள். இந்தத் தடையை உடைக்க என்ன செய்யலாம் என யோசித்த இந்தியர்கள் சிலர் கண்டுபிடித்த குறுக்குவழியே விசா கோயில் வழிபாடு.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதி சில்கூர். இங்குள்ள பாலாஜி கோயில் ஒன்று சுமார் 500 ஆண்டுகாலம் பழமைவாய்ந்தாக நம்பப்படுகிறது, இந்தக் கோயிலின் மீது நம்பிக்கையுடைய சிலர் சூட்டியுள்ள மற்றொரு பெயரே 'விசா கோயில்'

தற்போது டிரம்பின் தடையை தொடர்ந்து தினமும் தெலுங்கர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பிற மாநில இந்தியர்களும் தினசரி வருகை தந்து தங்களுடைய பாஸ்போர்ட், விசா விண்ணப்பப் படிவங்கள் உட்பட பல ஆவணங்களையும் வைத்து வழிபாடு நடத்தினால் அமெரிக்கா விசா கிடைக்கும் என நம்புகின்றனர். ஒரு சிலருக்கு எதார்த்தமாக கிடைத்த விசாக்களை கூட இந்த வழிபாட்டுடன் தங்கள் நம்பிக்கையை கலந்து முடிச்சுப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதை நம்பாதவர்களை நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ' யூ ஆர் ஆன்ட்டி இன்டியன்' என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் இது மூடநம்பிக்கையல்ல, எங்களின் ஆன்மீக நம்பிக்கை என்று வியாக்கியானமும் கொடுக்கத் துவங்கியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகம் பற்றி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த புத்தகம் ஏலம் !

அதிரை நியூஸ்: மே-01
கி.பி. 1590 ஆம் ஆண்டுகளில் மேற்குலகின் வெனிஸ் நகரிலிருந்து இருந்து அமீரகத்திற்கு வருகை தந்த முத்து மற்றும் ஆபரண நகைகளை வாங்கி விற்கும் வியாபாரி பால்பி என்பவர் 'டிராவல்ஸ் ஆஃப் பால்பி'  (Viaggio dell’Indie Orientali by Gasparo Balbi) என்ற பெயரில் தனது பயண அனுபவங்களை அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டார்.

அந்தப் புத்தகத்தில் அமீரகத்தின் ஆதி குடிகளான பனியாஸ் பழங்குடி மக்களைப் (Bani Yas tribe) பற்றிய விபரங்கள், அமீரகத்தில் முத்துகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள், அந்தக்கால பணமாற்ற முறைகள், வர்த்தக பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வந்த தீர்வைகள், பயண வழித்தடங்கள், தூரம் பற்றிய குறிப்புக்கள், இன்றைய 7 அமீரகத்தின் 4 அமீரகங்களான துபை, அபுதாபி, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா பற்றிய விபரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தின் முதலாவது பதிப்பின் பிரதி ஒன்று 150,000 யூரோக்களுக்கு (சுமார் 6 லட்சம் திர்ஹம்) ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகம் உட்பட இன்னும் பல பழைய அரிய கலை பொருட்கள் ஏலத்திற்காக அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற்று வரும் அபுதாபி புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மே 2 ஆம் தேதி வரை காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடலாம்.

What: Abu Dhabi International Book Fair (ADIBF)
Where: Abu Dhabi National Exhibition Centre (ADNEC)
When: April 26 to May 2, 9am to 10pm
Cost: Free entry  

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

'உழைப்பாளர் தினம்': எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தலைமை ஆசிரியர் ( ஓய்வு )

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் 
அதிரை நியூஸ்: மே-01
ன்று மே முதல் நாள், உழைப்பாளர்களின் தினம். இந்நாளில் உழைப்பின் உயர்வு பற்றியும், உழைப்பாளிகள் பற்றியும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவாக சிங்கப்பூர் சென்றிருந்தேன். சொந்த நாட்டை விட்டுச் சென்ற முதல் அனுபவம் அது. சிங்கப்பூரில் கண்ட கண்கவர் கட்டிடங்கள், அகன்ற அழகான சாலைகள், சுத்தமான சுற்றுப்புறச் சூழ்நிலைகள் என்னை ஒருபுறம் வியப்பில் ஆழ்த்தினாலும், சிங்கப்பூர் மக்களின் சுறுசுறுப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. சோம்பல் சிறிதுமின்றி உழைப்பு, உழைப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அம்மக்களின் மனப்பாங்கைக் கண்டு இந்தியனாகிய நான் வியந்து போனேன்.

சிங்கப்பூரை விட்டுத் தாயகம் திரும்பும் தருணம் வந்த போது சிங்கப்பூரில் தொழில் செய்துவந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த யாசீன் என்ற நண்பர் என்னிடம், 'ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்துள்ளீர்கள். சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன? ' எனக் கேட்டார்.

'அலுவலகங்கள், தொழிலகங்கள், வணிக வளாகங்கள், கல்விக் கூடங்கள் என எங்கு சென்றாலும் அங்குள்ளோரின் பொறுப்புணர்ச்சியையும், உழைப்புத் திறனையும் கண்டு வியந்து போனேன்' எனக் கூறினேன். அந்த நண்பர், 'நான் சென்ற மாதம் ஜப்பான் சென்று வந்தேன். ஜப்பானியர்களைக் கண்ட என் கண்களுக்கு சிங்கப்பூர் மக்கள் சோம்பேறிகளாகத் தெரிகிறார்கள்' என்றார்.  அவ்வாறெனில் ஜப்பானியர்களின் சுறுசுறுப்பும், உழைப்பும் எத்தகையதாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. அதனால் தான் மற்ற நாடுகள் மக்கள் பெருக்கத்தை எண்ணி மலைத்து நின்றபோது, 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு வயிற்ரோடு பிறந்தாலும் இரண்டு கைகளோடு பிறக்கிறது' எனப் பெருமிதத்தோடு ஜப்பானியர்களால் கூற முடிந்தது. அதே நேரத்தில் நம்முடைய சுறுசுறுப்பும், உழைப்பும் எத்தகையது என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மறைந்த தமிழறிஞர் முனைவர் மு.வரதராசனார் எழுதிய 'மண்ணின் மதிப்பு' கட்டுரையை படித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு தொழிற்சாலையின் நிர்வாகம், ஜெர்மனி நாட்டுக்குச் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளின் வெற்றிக்கான காரணங்கள் அறிந்துவர சில தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டது. ஜெர்மனி செல்லுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த குடும்பம் ஓன்று இந்தியாவில் வாசித்து வருவதாக அறிந்தனர். ஜெர்மனிக்குச் செல்வதை விடுத்து இந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து ஜெர்மனியின் நிலவரங்களை அறிந்துகொள்ளலாமே என முடிவெடுத்து, அவர்களைச் சந்தித்தனர். அந்தக் குடும்பத்தினரும் ஜெர்மனியிலுள்ள அரசின் தொழிற்கொள்கை பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் விரிவாக விளக்கினர்.

மேலும், அவர்கள் கூறியதுதான் நமது சிந்தனைக்குரிய செய்தி, 'நாங்கள் சில ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். இந்தியர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவும், அறிவிற் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பெரும்பாலோனோர் உழைக்க விரும்பாத சோம்பேறிகளாக இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். ஜெர்மனியர்களின் இக்கூற்றிலுள்ள உண்மையை நம்மால் முற்றிலும் மறுக்க முடியுமா? அதனால் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடினான் ' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டுக் களித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்று உழைப்பின் உயர்வை உணர்த்தும் கவிஞர் புலமைபித்தன் பாடல் ஒன்று 'உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என அறிவுறுத்துகிறது.

'படித்ததனால்அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு; பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' என்பது ஒரு திரை இசைப் பாடல். இப்பாடலில் இடம்பெற்றுள்ள மேதைகள் என்பவர்கள் யார்? அவர்களும் உறக்கம் துறந்து உழைத்த உழைப்பாளிகள், உழைப்பின் வாயிலாக உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள்.

உழைப்பாளிகள் இரு வகைப்படுவர். முதல் வகையினர் தனக்காகவும், தனது குடும்ப நலனுக்காக மட்டும் உழைப்பவர்கள் மற்றுறொரு வகையினர் தன்னலம் சிறிதுமின்றி பிற மக்களுக்காக உழைப்பவர்கள் பெருமானார் நபி ( ஸல் ) அவர்கள் பேருழைப்பை மேற்கொண்டார்கள். மக்களை நன்னெறி பக்கம் கொண்டு வருவதற்காக. அண்ணல் காந்தியடிகள் அயராது உஅளைதார் அடிமையுற்றுக் கிடந்த தனது நாட்டை விடுதலை பெறச் செய்வதற்காக. அன்னை தெரசா அயராது உழைத்தார் நாதியற்ற எளியவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதற்காக.

தனக்கென அல்லாது பிறருக்கென மிகப்பெரும் பணியில் ஈடுபட்ட ஒரு மனிதரைப்பற்றிய செய்தியை அண்மையில் ஊடக வாயிலாக அறிய நேர்ந்தது. பீஹார் மாநிலத்தின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹல்வுர் கிராமத்திலுள்ள ஒரு மலையைத் தனியொரு ஆளாகக் குடைந்துப் பாதை உருவாக்கியிருக்கிறார் அந்த மனிதர். 'தஷாத் மாஞ்சி' என்ற அந்த உழைப்பாளி சுத்தி, உளி இரண்டை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தப் பாதையை உருவாக்கியிருக்கிறார். இதை ஏன் அவர் செய்ய வேண்டும்? எவ்வித அடிப்படை வசதியுமற்ற கஹல்வுர் கிராம மக்கள் ஆதிக்க சக்தியினரின் அடக்கு முறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசும், அக்கிராமத்தைக் கண்டு கொள்ளவில்லை. பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை. இந்த முயற்சியின் போது பலர் தவறி விழுந்து இறந்து போனார்கள். மக்களின் இன்னலைக் களைய எண்ணிய மாஞ்சி மலையைக்குடைந்து பாதை அமைப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். 22 ஆண்டுகள் போராடித் தன் லட்சியத்தில் வெற்றியடைந்தார் தஷாத் மாஞ்சி. 'மலை மனிதன் மாஞ்சி' என நாடே அந்த உழைப்பாளியைக் கொண்டாடியது.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

மரண அறிவிப்பு ( முஹம்மது புஹாரி அவர்கள் )

அதிரை நியூஸ்: மே-01
அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ஹமீது சுல்தான் அவர்களின் மகனும், சேக்தாவூது, அகமது அனஸ் ஆகியோரின் சகோதரரும், அல்லா பிச்சை, ராவூத்தர் ஆகியோரின் மச்சானுமாகிய கீறி என்கிற முஹம்மது புஹாரி அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

அமீரகத்தில் மே மாத சில்லறை பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு

அதிரை நியூஸ்: மே-01
கடந்த மாத பெட்ரோல் சில்லறை விற்பனை விலையில் முதன்முதலாக சரிவு கண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் மே மாத விலையில் லிட்டருக்கு 6 காசுகளும் டீசல் 2 காசுகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை ஒப்பீட்டுக்காக.
சூப்பர் 98 : திர்ஹம் 2.01 (1.95)
சூப்பர் 95 : திர்ஹம் 1.90 (1.84)
ஈ பிளஸ் : திர்ஹம் 1.83 (1.77)
டீசல் : திர்ஹம் 1.97 (1.95)

தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 52.05 டாலருக்கும் அமெரிக்காவில் பேரல் ஒன்று 49.33 டாலருக்கும் விற்பனையாகி கொண்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்