அதிரை நியூஸ்: மே-01
கி.பி. 1590 ஆம் ஆண்டுகளில் மேற்குலகின் வெனிஸ் நகரிலிருந்து இருந்து அமீரகத்திற்கு வருகை தந்த முத்து மற்றும் ஆபரண நகைகளை வாங்கி விற்கும் வியாபாரி பால்பி என்பவர் 'டிராவல்ஸ் ஆஃப் பால்பி' (Viaggio dell’Indie Orientali by Gasparo Balbi) என்ற பெயரில் தனது பயண அனுபவங்களை அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டார்.
அந்தப் புத்தகத்தில் அமீரகத்தின் ஆதி குடிகளான பனியாஸ் பழங்குடி மக்களைப் (Bani Yas tribe) பற்றிய விபரங்கள், அமீரகத்தில் முத்துகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள், அந்தக்கால பணமாற்ற முறைகள், வர்த்தக பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வந்த தீர்வைகள், பயண வழித்தடங்கள், தூரம் பற்றிய குறிப்புக்கள், இன்றைய 7 அமீரகத்தின் 4 அமீரகங்களான துபை, அபுதாபி, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா பற்றிய விபரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகத்தின் முதலாவது பதிப்பின் பிரதி ஒன்று 150,000 யூரோக்களுக்கு (சுமார் 6 லட்சம் திர்ஹம்) ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகம் உட்பட இன்னும் பல பழைய அரிய கலை பொருட்கள் ஏலத்திற்காக அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற்று வரும் அபுதாபி புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மே 2 ஆம் தேதி வரை காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடலாம்.
What: Abu Dhabi International Book Fair (ADIBF)
Where: Abu Dhabi National Exhibition Centre (ADNEC)
When: April 26 to May 2, 9am to 10pm
Cost: Free entry
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.