தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் 1426-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)இன்று வியாழக்கிழமை மே 25 தொடங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது.
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேதி வாரியாக தீர்வாயம் நடைபெறவுள்ள உள்வட்டங்கள் விவரம்:
மே 25-ம் தேதி (வியாழன்) குறிச்சி, 26-ம் தேதி (வெள்ளி) திருச்சிற்றம்பலம், 30-ம் தேதி (செவ்வாய்) அதிராம்பட்டினம், 31-ம் தேதி (புதன்) தம்பிக்கோட்டை, ஜூன் 1-ம் தேதி (வியாழன்) நம்பிவயல், 2-ம் தேதி (வெள்ளி) பெரியக்கோட்டை, 6-ம் தேதி (செவ்வாய்) துவரங்குறிச்சி, 7-ம் தேதி (புதன்) மதுக்கூர், 8-ம் தேதி (வியாழன்) ஆண்டிக்காடு, 9-ம் தேதி (வெள்ளி) பட்டுக்கோட்டை.
இதில், பொதுமக்கள் பங்கேற்று பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நிலங்கள் குறித்த எல்லை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுதல் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிழங்கோட்டை, பழஞ்சூர் உட்பட அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு வரும் மே 30 ந் தேதி திங்கக்கிழமை காலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மிக்க மகிழ்ச்சி. அதனை அதிராம்பட்டினத்திலேயே நடத்தினால் உதவி வசதியாக இருக்கும்.
ReplyDelete