.

Pages

Wednesday, May 17, 2017

துபாயில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது அபராதம் விதிப்பு!

அதிரை நியூஸ்: மே 17
துபையின் சுத்தம், சுகாதாரத்தை பேணும் நோக்குடன் துபை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாய் துபையின் சந்து பொந்துகள், மக்கள் நடமாடும் பகுதிகள் சிலவற்றில் மிகச்சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர், இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 700 பதாகைகள் நிறுவப்பட்டன.

ஆரபி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் அமைந்துள்ள இந்த எச்சரிக்கை பதாகைகள் துபை முழுவதும் குறிப்பாக திறந்தவெளி சிறுநீர் கழிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பழைய தேரா, பர்துபை, வணிக மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள், சத்வா, சப்கா மற்றும் நாயிஃப் ஆகிய பகுதிகளில் அதிகமாக நிறுவப்பட்டன.

இனி சிறுநீர் கழித்து முதன்முறையாக பிடிபடும் நபரிடம் 500 திர்ஹம் அபராதமும், 2வது முறையும் பிடிபடும் நபரிடம் 1,000 திர்ஹமும் அபராதமாக வசூலிக்கப்படும் என துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், துபை நகரின் தூய்மையையும் கலாச்சார அழகியலையும் பேணும் வண்ணம் துபையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பால்கனிகளில் துணிகளை தொங்கவிடுவது முற்றிலும் தடை செய்யப்படும் அதுபோல் சிகரெட் துண்டுகளை வீசியெறிவது, குப்பைகளை வீசுவது, சூயிங் கம் மென்று விட்டு கண்ட இடங்களில் துப்புவதும், அனைத்திற்கும் மேலாக பான் எனப்படும் வெற்றிலையை மென்று துப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

துபை மாநகராட்சியால் விதிக்கப்படும் சில அபராதங்கள் பற்றிய விபரங்கள்:

500 திர்ஹம் அபராதமாக வசூலிக்கப்படும் குற்றங்கள்:
1. குப்பைகளை சாலையில் எறிவது.
2. திரவ மற்றும் திடக்கழிவுகளை சாலையில் எறிவது.
3. குப்பைகள் மற்றும் பிற சிதறும் பொருட்களை மூடாமல் வாகனங்களில் ஏற்றிச் செல்வது.
4. கழிவறையில் அல்லாமல் பிற பகுதிகளில் சிறுநீர், மலம் கழிப்பது.
5. பொதுவான பகுதிகளில் எச்சில் துப்புவது.

1,000 திர்ஹம் அபராதமாக வசூலிக்கப்படும் குற்றங்கள்:
1. மக்கள் கூடும் பொதுவான இடங்களில் சூயிங்கம் மற்றும் எச்சில் துப்புவது.
2. பொது இடங்களில் குப்பைகளை எரிப்பது.

3,000 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் குற்றங்கள்:
1. உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை கழிவுநீர் பாதைகள், கழிவுநீர் தொட்டிகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் கொட்டுவது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.