.

Pages

Thursday, May 25, 2017

தென்னையில் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 % மானியம் !

பட்டுக்கோட்டை, மே 25:
தென்னையில் சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 % மானியம் வழங்கப்படுகிறது. பயிர் வளம் பெற சொட்டு நீர் பாசனம் சிறந்தது என்றார் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது:
தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 400 அடி ஆழத்திலுள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலம் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேருக்கு நீர் பாய்ச்சும் முறையே மிகச்சிறந்தது.

தேவைக்கு அதிகமான தண்ணீரை பாய்ச்சுவதால், உதாரணமாக 10 நாளுக்கு 1 முறை நீர் பாய்ச்சும்போது முதல் 2 நாள்கள் அதிக நீர் பிடிப்பினாலும், கடைசி 2 நாள்கள் நீர் பற்றாக்குறையாலும் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மீதி 6 நாள்கள் மட்டும்தான் சீரான வளர்ச்சி பெறுகிறது. காரணம் பயிர்கள் நன்கு வளர வேர் பகுதியில் நீரின் அளவும், காற்றின் அளவும் சமமாக இருக்க வேண்டும்.

வேருக்கு மட்டும் நீர் கொடுப்பதால் வரிசைக்கு வரிசை இடைவெளியில் களைகள் முளைப்பதில்லை. ஆகையால் உரம், நீர் முழுவதையும் பயிரின் வேர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நன்கு வளர்கிறது.

சொட்டு நீர் பாசனத்தால் வயலிலுள்ள அனைத்து மரங்களும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் நீரை பெற்று மண் கடினமாவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமாக வளர்கிறது. இப்பாசன முறையில், மடை பாசனத்தை ஒப்பிடும்போது 40 சதவீதம் நீரே போதுமானது.

மேலும் ஆட்கள், மின்சாரம், நீர்த்தேவை ஆகியவை மிகவும் குறைவதால் களைகளும் கணிசமாக குறைந்து அதிக மகசூல் கிடைக்கிறது. காலத்தின் நிலையை புரிந்து கொண்டு தண்ணீரின் அருமையை உணர்ந்து, நிலம் முழுவதும் நீர் பாய்ச்சுவதை மாற்றி, பயிரின் வேருக்கு மட்டும் நீர் வழங்கும் சொட்டு நீர் பாசன முறையே மிகவும் சிறந்தது.

நடப்பு நிதியாண்டில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் தென்னையில் சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இதுகுறித்து விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி கூடுதல் விவரங்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.