.

Pages

Thursday, May 25, 2017

ரமலானை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 181 பள்ளிவாசல்களுக்கு 320 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும்: ஆட்சியர் தகவல் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 181 பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கடைப்பிடிக்க 320 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழக அரசு, பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் பச்சரிசி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 181 பள்ளி வாசல்களுக்கு ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதற்காக 320 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 181 பள்ளி வாசல்களுக்கு 320 மெட்ரிக் டன் பச்சரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.