.

Pages

Saturday, May 20, 2017

துபாயில் 10 வருட இடைவெளியில் ஒரே பாணியில் நடைபெற்ற கோர விபத்து

அதிரை நியூஸ்: மே 20
துபையில் இரு தினங்களுக்கு முன் ஷேக் முஹம்மது பின் ஜாயித் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஆசிய நாட்டைச் சார்ந்த ஓருவரின் வாகனம் திடீரென நடுரோட்டில் பழுதாகிறது, எவ்வளவோ முயன்றும் அதை மீண்டும் இயக்க முடியாததால் அவர் காரிலிருந்து இறங்கி சாலையை கடந்து நடைபாதையோரம் செல்ல எத்தனிக்கையில் வேகமாக வந்த காரில் அடிபட்டு பலத்த காயங்களின் காரணமாக மருத்துவமனையில் மரணிக்கின்றார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கையில் இந்த சோக நிகழ்விலும் எதிர்பாரா ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. சுமார் 10 வருடங்களுக்கு முன் இதேபோல் நடுரோட்டில் கார் பழுதானதால் ரோட்டை கடக்க முயன்ற வேறொருவர் (similar fashion 10 years back) இந்த ஆசிய நாட்டவர் காரால் அதேபோல் மோதப்பட்டு உயிர்துறந்துள்ள ஆவணக் குறிப்புக்கள் போலீஸாரை ஆச்சரியப்படுத்தியுள்ளன.(The police found the tragic co-incidence after it checked the records of the deceased)

தற்போது நடந்த சம்பவத்தில், மோதிய காரின் ஓட்டுனர் மது அருந்தியிருந்தாரா? ரோட்டின் தன்மை எவ்வாறு இருந்தது? தட்ப வெப்பமும், வெளிப்புற பார்வைத்திறனும் எவ்வாறு இருந்தது? சாட்சிகளின் வாக்குமூலங்கள் என விபத்தின் தன்மையை நிபுணர்களின் ஆலோசணையுடன் ஆராய்ந்த போலீஸார் இது மோதிய டிரைவரின் குற்றமல்ல என ஆரம்பகட்டமாக தீர்மானித்துள்ளதால் அவர் மீது வழக்கு ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.