.

Pages

Monday, May 22, 2017

அதிரையில் தமுமுக சார்பில் சஹர் உணவு வழங்க தீவிர ஏற்பாடு !

அதிராம்பட்டினம், மே 22
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் அவ்வமைப்பின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அகமது ஹாஜா தலைமை வகித்தார்.  அதிரை பேரூர் துணைத் தலைவர் செய்யது புஹாரி, செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமுமுக சார்பில் கடந்த வருடங்கள் போல் அதிரையில் இவ்வருடமும் புனித ரமலான் மாதத்தில் அதிரையில் தங்கியுள்ள வெளியூர் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பயணிகள், இமாம்கள், முஅத்தின்கள், வயோதிகர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு சஹர் உணவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

தினமும் சுமார் 150 பேருக்கு மேல் உணவு தயாரித்து வழங்குவது எனவும், சஹர் உணவு தயாரிப்பு பணி, வருகையாளர்கள் பதிவேடு மற்றும் நிதி திரட்டும் பணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நிதி உதவி அளிக்க விரும்பும் தன்னார்வல கொடையாளர்கள் கீழ்காணும் அலைப்பேசியில் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
1. அதிரை அகமது ஹாஜா -  9003127748
2. செய்யது முகமது புஹாரி -  9944449848
3. ஏ.ஆர் சாதிக் பாட்சா -  9942033233
4. எம்.ஆர் கமாலுதீன் -    9944499354
5. தமீம் அன்சாரி - 8675196695
6. சலீம் - 7200525050

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.