.

Pages

Monday, May 22, 2017

ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்க, பட்டுக்கோட்டையில் நாளை சிறப்பு முகாம் !

பட்டுக்கோட்டை, மே 22
ஏரி குளங்களில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பம் அளிக்க 23-05-2017 பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  சிறப்பு முகாம் நடைபெறு உள்ளது என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி சீரமைத்து குடிமராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசால் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஏரி, குளங்களில் உள்ள உபரியாக உள்ள மண்ணை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வது தொடர்பான சிறப்பு முகாம் 23-05-2017 அன்று காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் விவசாயிகள், பொதுமக்கள், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்க மேற்கண்ட நாளில் மனு அளித்து உடனே அனுமதி பெற்றுக்கொள்ள  இச்சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை இம்மண்ணைக்கொண்டு வளப்படுத்திக்கொள்ளவும். விளைநில மண்ணை மேம்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திடவும் இலவசமாக இரண்டு ஆண்டிற்கு  முறையே ஏக்கர் ஒன்றுக்கு நன்செய் நிலங்களுக்கு 75 கன மீட்டரும் புன்செய் நிலங்களுக்கு 90 க.மீட்டரும் பொதுமக்கள் சொந்த பயன்பாட்டிற்கு 30 க.மீட்டரும்  மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 60 க.மீட்டரும் இலவசமாக வழங்கப்படும் எனவும் வட்டாட்சியர் தெரிவித்தார்கள். இந்நேர்வில் மண் எடுப்பதற்கான இயந்திர பயன்பாட்டு செலவு மற்றும் ஏற்றுக்கூலியாக கனமீட்டர் ஒன்றுக்கு ரூ35 .20 மட்டும் செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவித்தார்கள்.

விவசாயிகள்,பொதுமக்கள், மண்பாண்ட தொழிலார்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏரி குளங்களில் உள்ள மேற்பரப்பு மண்ணில் நைட்ரஜன் மணிச்சத்து,தழைச்சத்து உள்ளிட்ட தாதுப்பொருட்கள்  அதிகமாக உள்ளதுடன், இம்மேல்மண்ணில் வளிமண்டல நைட்ரஜன் சத்தினை நிலைப்படுத்தக்கூடிய “ரைசோபியம்” என்ற நுண்ணுயிரி காணப்படுகிறது.

இம்மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் விவசாய நிலம் வளப்படுத்தப்பப்படுவதுடன் அனைத்து நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் உள்ளதால் விளைச்சல் திறன் அதிகப்படுத்த முடியும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.