.

Pages

Monday, May 29, 2017

அதிரை பைத்துல்மால் 24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்பு மலர் வெளியீடு ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி, மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி, ஆண்டுதோறும் ஃபித்ரா அரிசி விநியோகம், தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட சேவைத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனாஸா ( இறந்த உடல் ) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும்  தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் ஆற்றிய பொதுநல சேவைப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறும் வகையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து சிறப்பு மலரை வெளியிட்டார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் மற்றும் ஏனைய நிர்வாகிகள் - உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் வாசிக்கும் வகையில் கையடக்கமாக சிறப்பு மலர் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2000 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் நிர்வாகக்குழு பட்டியல், அதிரை பைத்துல்மாலின் சேவைத் திட்டங்கள், நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள், 24 வருடங்கள் ஆற்றிய சேவை திட்டங்களின் புள்ளியல் விவரங்கள், புகைப்படங்கள், கொடையாளர்கள் - பயனாளிகள் தொடர்புகொள்ளும் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துமால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிரை பைத்துல்மால்  24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்பு மலர் நூல்:
 
 
  
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.