.

Pages

Tuesday, May 23, 2017

ஷார்ஜாவில் பல நாள் திருடன் சிக்கினான் !

அதிரை நியூஸ்: மே 23
அமீரகத்தில் திடீரென ஒரு அனாமதேய மொபைல் அழைப்பில் வரும் நூதன திருடர்கள் எதிர்முனையில் உள்ள அப்பாவிகளிடம் அமீரகத்தின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து அழைப்பதாகவும், பெரிய பணப்பரிசு விழுந்திருப்பதாக கூறியும் நம்ப வைத்து பின் அந்தப் பரிசை பெறுவதற்காக அவனுடைய மொபைலுக்கு போன் கிரடிட்டை டாப் அப் செய்யச் சொல்வார்கள்.

டாப் அப் செய்தவுடன் அந்த மொபைல் எண் அணைக்கப்பட்டுவிடும். இந்த வகையான ஏமாற்றுத் தொழில் குறித்து அனேகர் விழித்துக் கொண்டதால் தற்போது ஓரளவு மட்டுப்பட்டுள்ளது என்றாலும் முற்றாக நின்றுவிடவில்லை.

இதுபோல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவன் நேற்று மாலை ஒரு மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து அவருக்கு 2 லட்சம் திர்ஹம் பரிசு விழுந்துள்ளதாக கதை விட்டுள்ளான் ஆனால் அவனுக்கு தெரியாது தான் அழைத்தது ஷார்ஜா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பயன்படுத்தப்படும் மொபைல் எண் அது என்று.

உஷாரான போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த அதிகாரி அவனிடம் பேசிக்கொண்டே உளவுத்துறைக்கு தகவல் தர, உளவுத்துறை அதிகாரிகள் அந்த மொபைல் எண் எங்கிருந்து இயக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து அந்த டுபாக்கூர் ஆசாமியை கைது செய்தனர்.

ஷார்ஜாவில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் தர விரும்புபவர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நேரடியாக புகார் கூற: 999 அல்லது 06-5632222
இலவச தொலைபேசி எண்: 800 151
குறுஞ்செய்தி அனுப்ப: 7999
இணையதளம் வழியாக புகார் தெரிவிக்க: www.shjpolice.gov.ae/najeed

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.