அதிராம்பட்டினம் மே-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்திய 14 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த மே 5 ந் தேதி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, கோட்டையூர், கண்டனூர், சிவகங்கை, பாண்டிச்சேரி உள்ளிட்ட மொத்தம் அணிகள் 22 கலந்துகொண்டு விளையாடின. இதில் அதிரை, சிவகங்கை, பள்ளத்தூர், கண்டனூர் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிரை AFFA, பள்ளத்தூர் தென்னரசு ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் 1-1 என கோல் போட்டு சமநிலையில் இருந்தனர். பின்னர் இரு அணிகளுக்கும் 5 நிமிட கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் அதிரை AFFA அணி நட்சத்திர வீரர் ஆசிப் 1 கோல் அடித்தார். போட்டி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர், கால்பந்தாட்டக் கழக தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஹாஜி ஜமால், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, அதிரை பேட்மிட்டன் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் ரொக்கப்பரிசு வின்னர் அணிக்கு ரூ 25 ஆயிரம், ரன்னர் அணிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் கேடயப்பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உட்பட 10 வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை அகமது ஹாஜா, எஸ்.ஐ.எஸ் முஹம்மது ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக கார்த்திக் பணியாற்றினார். இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
விழா ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் நிர்வாகிகள் எம். ஓ செய்யது முஹம்மது புஹாரி, முஹம்மது தமீம், என்.சேக்தம்பி, அகமது அனஸ், சமியுல்லாஹ் மற்றும் ஏனைய நிர்வாகிகள் செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.