சுமார் 8 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.
கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.
சாலைப் போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்
நன்றி: தி இந்து தமிழ்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.