தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா ( 43 ). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதையடுத்து தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதில் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தாகவும், இதுவரையில் 3 முறை மட்டும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு உள்ளதாகவும், ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகக் கூறினார். மருத்துவர்கள் அறிவுரையின் படி மேற்கொண்டு மீதமுள்ள 5 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 1.50 லட்சம் வரை செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் நிதி உதவி கோரி உள்ளார்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054
பூரண நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்
ReplyDeleteபூரண நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்
ReplyDeleteபூரண நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்
ReplyDelete