.

Pages

Monday, May 29, 2017

அதிரையில் அதிநவீன உடற் பயிற்சிக்கூடம் திறப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 29
'தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்' என்றார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் எதிரே இயங்கி வருகிறது த்ரீ ஸ்டார் அதிநவீன உடற்பயிற்சி மையம். இங்கு உடற்பயிற்சிக்குத் தேவையான ஓடுபொறிகள், நீளவட்ட இயந்திரங்கள், உடற்பயிற்சி மிதிவண்டிகள், கால்களை நீட்டி மடக்கி செய்யும் பயிற்சி சாதனங்கள், கால்களை பதித்து மிதிக்கும் சாதனம், அமர்ந்தபடி முழங்கால் உயர்த்தும் பயிற்சி சாதனங்கள், அமர்ந்தபடி முன் பின் இழுக்கும் பயிற்சி சாதனங்கள், பல்முனை வலுப்படுத்தும் பயிற்சி சாதனங்கள், பல்நோக்கு பயிற்சி மேசை, இடுப்பை வலுப்படுத்தும் பயிற்சி சாதனங்கள், தசையை வலுப்படுத்தும் சாதனம், ஒலிம்பிக் பளூதூக்கும் பயிற்சி சாதனங்கள் என 35 உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளது. மேலும் உடல் சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடல் ஆரோக்கிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான அதிநவீன உடற்பயிற்சி சாதனங்களின் பயன்பாட்டு தொடக்க விழா பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்;
உடல் ஆரோக்கியம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலின் இரத்த ஓட்டம், இருதயம், நுரையிரல் ஆகியன சீராக இயங்கவும், உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன. வயிறு, இடுப்பு பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைப்பதற்கு உதவும். உடற்பயிற்சி உடலுக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கும் நன்மை அளிக்கின்றன. மன அழுத்தம் நீங்குகின்றது. தினமும் எளிதான உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடும் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் திறனை மேம்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வாயிப்பினை உருவாக்க இந்த உடற்பயிற்சிக் கூடம் அடிப்படையானதாக அமையும்' என்றார்.

முன்னதாக உடற்பயிற்சிக் கூடத்தின் நிறுவனர் பி.எம்.ஏ நஜ்முதீன் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சி மைய தொடர்புக்கு: 9944922949
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.