அதிரை நியூஸ்: மே 20
புனிதமிகு ரமலானில் ஏகன் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவர்களாக உலக முஸ்லீம்கள் இன்னும் அதிகமதிகம் தான தர்மங்களை வழங்கி மகிழ்வர். முஸ்லீம்களிடம் சுரக்கும் இந்த இரக்க சிந்தனையை சில இழிபிறவிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். இத்தகையவர்களின் காசு பறிக்கும் கொடூர விளையாட்டு ரமலானுக்கு முன்பே துவங்கிவிட்டது குறித்து துபை போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ளதால் அது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கடன் மற்றும் இதர பொருளாதார குற்றங்களின் காரணமாக பலர் துபை சிறையிலுள்ளனர். அத்தகையர்களின் குடும்பங்களை சிறை மீட்க உதவுவதாக கூறி அணுகும் குற்றவாளிகள், சிறையிலுள்ளவர்களின் பாஸ்போர்ட், போட்டோ, நீதிமன்றத் தீர்ப்பு உட்பட அனைத்து விபரங்களையும் குடும்பத்தினரை ஏமாற்றிப் பெற்று சமூக வலைத்தளங்களில் உதவி கோரி பதிவேற்றம் செய்கின்றனர் ஆனால் அவர்கள் வசூலிக்கும் எந்தக் காசும் சிறைவாசிகளின் விடுதலைக்காக பயன்படுத்தப் படுவதில்லை. இதையறியாத பொதுமக்கள் இந்த போலிச் செய்திகளை உண்மையென நம்பி பிற நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பார்வேர்டு செய்கின்றனர்.
எனவே, இத்தகைய செய்திகளை டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாலோ அல்லது பிறரின் செய்திகளை பார்வேர்டு செய்தாலோ தண்டிக்கப்படுவீர்கள் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் துபை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தங்களின் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.