அதிரை நியூஸ்: மே 19
சில தினங்களுக்கு முன்னர் தான் பல்வேறு போக்குவரத்து உயர்வுகள் பற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில் அத்துடன் மேலும் ஒரு போக்குவரத்து குற்றத்திற்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிக்னல்களில் சிவப்பு விளக்கை மீறிச்செல்வோர் (Jumping the Red Signal Lights) மீது இதுவரை 800 திர்ஹம் அபராதம், 8 கரும்புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகன முடக்கம் என தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இனி இது ஜூலை 1 ஆம் தேதி முதல் 1,000 திர்ஹம், 12 கரும்புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகன முடக்கம் என உயர்த்தப்பட்டுள்ளதாக துபை போலீஸ் அறிவித்துள்ளது.
உயர்வுக்கு காரணம் இது தான்:
2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றோரால் 119 விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வருடம் முழுவதும் இதே குற்றத்திற்காக 25,814 வழக்குகளும் பதியப்பட்டன.
2017 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் 9,130 பேர் இதே குற்றத்தை செய்துள்ளதால் 33 விபத்துக்களும் 38 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுனர்களின் பொடுபோக்குத்தனத்தை கட்டுப்படுத்த இந்த தண்டனை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக துபை போலீஸ் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.