அதிரை நியூஸ்: மே 18
பொதுவாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த ஒற்றை பெண் எம்.பியே களமாடும் ஆனால் இப்போது ஒரு ஆண், ஒசாமா ஷஹீன் என்ற அந்த உறுப்பினர் குவைத் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களை வேலையை விட்டும், வெளிநாட்டு மாணவர்களை குவைத் அரசுப்பள்ளியை விட்டும் தூக்கவும் குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத கணக்கின்படி, குவைத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 3,064,193 இதில் சுமார் 69 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர். அதேபோல் குவைத் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுவோர் 71,014 பேர் இதில் குவைத் நாட்டவர்கள் 46,079 பேர் மீதமுள்ள 24,935 பேர் பிற அரபு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தோர். இந்த வெளிநாட்டவர்கள் அனைவரையும் வேலையை விட்டுத் தூக்கினால் சுமார் 25,000 குவைத் நாட்டவர்கள் அந்த வேலையை பெற முடியும்.
அதேபோல், குவைத் அரசு மாணவர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 4,973 தினார்களை செலவிடுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் மொத்தம் 51,378 பேர் பயில்வதால் அவர்களுக்கு குவைத் அரசு ஆண்டொன்றுக்கு சராசரியாக 253,653,186 தினார்களை செலவிடுகிறது. இந்த மாணவர்களையும் குவைத் அரசுப் பள்ளிகளிலிருந்து வெளியேற்றி இந்தப் பணத்தை சேமிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பொதுவாக எந்தவொரு வெளிநாட்டு மாணவர்களும் குவைத் அரசுப்பள்ளியில் சேர முடியாது, 16 வகையான விலக்குகளுக்குள் வருவோரைத் தவிர. அவற்றில் சில வகையினர் யாரெனில்,
1. குவைத் தாய்க்கும் வளைகுடா நாடுகளின் தந்தைக்கும் பிறந்தவர்கள்.
2. ராஜதந்திரிகளின் குழந்தைகள் (Children of Diplomats)
3. போரில் வீரமரணமடைந்த அல்லது சிறைபட்டுள்ள குவைத்தியர் அல்லாதவர்களின் குழந்தைகள்.
4. துன்பத்திற்கு உள்ளாகி, வாழ வழியற்ற நாடுகளிலிருந்து வரும் பெற்றோர்களின் குழந்தைகள்.
5. பல்கலைக்கழக ஊழியர்களின் குழந்தைகள்.
6. இமாம், முஅத்தின் போன்றோரின் குழந்தைகள்.
போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் மனிதாபிமான அடிப்படையில் சில வகையினரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு பிற மாணவர்களை தூக்க வேண்டும் அல்லது கட்டணம் வசூலிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.