.

Pages

Wednesday, May 17, 2017

தஞ்சை மாவட்டத்தில் அனுமதியில்லாத வீட்டு மனைகளை 6 மாத காலக் கெடுவிற்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை சீர்படுத்தி வரன்முறைப்படுத்துவது தொடர்பாக  பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர் ஊராட்சிகள் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (17.05.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வீட்டு மனைகள், அரசு அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை. விவசாய நிலம், நஞ்செய் நிலம், புன்செய் நிலம் ஆகியவற்றில் சிலர் அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்கப்பட்டு வருகின்றனர்.  அனுமதி பெறாமல் கட்டப்படும் வீடுகளில் தேவையான குடிநீர், சாலை வசதி, பூங்கா வசதி, சிறுவர்கள் விளையாடுவதற்கு இடம் போன்றவை சரியாக அமைப்பதில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியற்ற மனைகளை வைத்திருக்கும் மக்கள் குடியிருப்பு நல சங்கத்தினர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுக வேண்டும்.  மேலும், ஆறு மாத கால கெடுவிற்குள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

இக்கூட்டத்தில் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் சு.சங்கரமூர்த்தி, தஞ்சாவூர் உள்ளுர் திட்டக்குழுமம் உறுப்பினர் செயலர் க.மூக்கையா, மண்டல நகராட்சி துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஊராட்சிகள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முருகேசன்,  மாநகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பேரூராட்சிகள் செயல் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.