.

Pages

Saturday, May 20, 2017

கேரளாவில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்த 300 வருட பாரம்பரிய வீடு ( படங்கள் )

அதிரை நியூஸ்: மே 20
சுமார் 300 வருடங்களுக்கு முன் கேரளத்தின் பதனம்திட்டா மாவட்டத்தின் மெப்ரால் எனும் கிராமத்தில் கட்டப்பட்ட அழகிய மர வீடு பரம்பரை பரம்பரையாக குடும்பத்தின் இளைய மகனின் சொத்தாக வந்த சேரும்.

தற்போது சுமார் 75 வயதிலுள்ள அன்றைய 16 வயது சிறுவன் ஜார்ஜ் ஓம்மனுக்கும் இந்த வாரிசு வீடு கிடைத்தது. ஆனால் டெல்லிக்குப் படிக்கச் சென்ற ஓம்மன் பின்பு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கும் சென்றதால் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் இந்த பாரம்பரிய வீட்டிற்கு வர முடியவும் இல்லை, அவரும் அவருடைய வாரிசுகளும் இங்கு வசிக்கவும் விரும்பவில்லை.

தாம் வசிக்க விரும்பாத வீட்டை விற்க நினைத்தார் ஜார்ஜ் ஓம்மன், விலை பேசியவர்கள் வீடிருக்கும் அந்த நிலத்தை மட்டும் தான் விரும்பினார்களே தவிர வீட்டை உடைக்கவே விரும்பியதால் அவர்களிடம் விற்க விரும்பவில்லை.

இந்த வீட்டைப் பற்றி அறிந்த டெல்லி குருகிராமில் வசிக்கும் பிரதீப் சச்தேவா என்ற 59 வயது கட்டட வடிவமைப்பாளர் அந்த வீட்டை உடைக்காமல் தனது சத்ரானா கிராமத்திலுள்ள 1.4 ஏக்கர் பண்ணைக்குள் இடம் மாற்ற முன்வந்தார்.

கேரளத்தில் இன்னும் வசிக்கும் ஆணியின்றி வீடமைக்கும் பழமையான தொழிற்நுட்பம் தெரிந்தவரான நாராயண் ஆசாரி என்பவரை நியமித்து அந்த வீட்டை சேதமின்றி பிரித்து டிரக்குகள் மூலம் கேரளத்திலிருந்து சுமார் 2,400 தூரத்தில் உள்ள டெல்லிக்கு கொண்டு சென்று, அங்கு ஒன்றரை மாத செலவில் அந்த வீட்டை அப்படியே மீண்டும் நாராயண் ஆசாரியை கொண்டு உருவாக்கினார்.

சிற்சில மாற்றங்கள் மற்றும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டு புதிய இடத்தில் அவதாரம் பூண்டுள்ள அந்த வீடு இன்னும் 100 ஆண்டுகள் பூமியில் நீடித்து நிற்கும். தனது பாரம்பரிய வீடு தன்னால் இடிக்கப்படாமல் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளதை நினைத்து பூரிக்கின்றார் ஜார்ஜ் ஓம்மன்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.