.

Pages

Thursday, May 25, 2017

இன்று பிறையை பார்க்குமாறு சவுதி சுப்ரீம் கோர்ட் பொதுமக்களுக்கு வேண்டுகோள் !

அதிரை நியூஸ்: மே 25
பிறையின் அடிப்படையில் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் என்றும், முஸ்லீம்கள் தங்களுடைய புனிதமிகு ரமலான் நோன்பையும் 2 இரு பெருநாட்களை பிறையை கண்ணால் கண்டு தீர்மானிக்க வேண்டும் என அல்லாஹ்வுடைய தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ் எனும் வழிகாட்டுதல் நமக்கு சொல்லித் தந்துள்ளது. அதன்படி இன்று வளைகுடா பிரதேசங்களில் ஷஃபான் மாதம் 29 ஆம் நாள் என்பதால் பிறையை பார்க்க வேண்டிய நாளாகும்.

சவுதியின் சுப்ரீம் கோர்ட் இன்று வானில் பிறை தென்படுவதை பார்க்குமாறும், புறக்கண்ணால் அல்லது பைனாகுலர் எனும் தொலைநோக்கி வழியாக காண்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள நீதிமன்றத்தில் தங்களது சாட்சியத்துடன் தெரிவிக்குமாறு அல்லது தங்களது பகுதியிலுள்ள அரசின் மையத்தை அணுகி அவர்கள் மூலமாக தங்களின் சாட்சியத்தை அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒருவேளை இன்று பிறை காணப்படாவிட்டால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று முதல் புனித ரமலான் நோன்பு துவங்கும். சவுதியின் முடிவை பின்பற்றியே அமீரகத்திலும் நோன்பும் பெருநாட்களும் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.